நான் இன்று இங்கே அறிமுகப்படுத்த போவது 150பில்லியன் இனைய பக்கங்களைக் கொண்டு சுருக்கப்பட்ட இனையதள சேமிப்பு அறை அல்லது இனைய நூலகம். இங்கே நீங்கள் எந்த ஒரு தளத்திலும் ஆரம்ப வடிவமைப்பிலிருந்து பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக google.com யை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரைக்கும் அவ்தளம் என்ன என்ன மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கு என்பதையை அறியலாம். அங்கு 1998ல் இருந்து வருட மாத மாற்றங்களுக்கு உட்படுத்தி வெளியிட்ட இனையதளங்களை பார்க்கலாம். அதைப்போல இப்போது இனையத்தில் இல்லாத பழைய வலைத்தளங்களையும் பார்வையிடலாம். கீழே காணப்படும் படத்தை பார்த்தால் ஒரளவு புரிந்துக்கொள்ளலாம். இவ் சேவையை www.archive.org என்ற தளம் வெகுக்காலமாக தெடர்ந்துக்கொணடுள்ளது. இது எல்லோரும் தேவைப்படுகிற பிரயோசனமான சேவையாகும்.எனக்கும் மிகவும் பயனுள்ள தளமாகவே அமைகிறது.

இது மட்டும் அல்லாது இவ் தளம் இன்னும் நிறைய சேவைகளை வழங்குகிறது,ஆனாலும் நான் இவ்தளத்தை நூலகமாக மட்டுமே அறியத்தந்தேன். இவ் தளத்தை பற்றி மேலதிகமாக www.archive.org தளத்திற்கே விரைந்து பாருங்கள்.

கீழே காட்டியவாறு இவ் தளத்திற்கு விரைந்து Wayback Machine என்ற கட்டத்தில் நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தின் முகவரியை வகையிடவும் பிறகு Take me back ஆழியை அழுத்தவும்.

கீழே காட்டியவாறு lankanet.org type பண்ணி Take me back button அழுத்தியவுடன் இதோ கிடைத்த பெறுப்பேறு, அங்கே 1998இல் இருந்து lankanet.org நிறுவனத்தில் இனையப்பக்கங்களை பார்வையிடலாம்.

கீழே காணப்படப்படும் படத்தில் google.com இனையத்தளம் மாற்றமடைந்த காலத்திற்கு அமைய links காட்டுகிறது.

இங்கே Google.com ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் இனையதள பக்கத்தை காணலாம். நீங்கள் உற்று கவனித்தால் லினக்ஸ் பற்றி தேடுவதற்கு ஒரு பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இங்கே yahoo.com இனையத்தளத்தில் தேடல் ஆரம்ப நிலை காணலாம்.

இப்படி நீங்கள் விரும்பிய இனையத்தள பக்கங்களை பார்வையிடலாம், இனையமும் மற்றும் இனையதளங்களிலும் அதன் பழைய இதிகாசங்களை பற்றிய தெரிந்துக்கொள்ள விரும்புவோருக்கு மிக சிறந்த தளமாகும்.

இணையத்தளங்களுக்கு உலாவரும் நீங்கள் அதில் அறிமுகப்படுத்தப்படும் புதிய இணையவசதிகளைப்பற்றி அறிவதில் ஆர்வமாக இருப்பீர்கள். அப்படி என்றால் அவசியமாக .xxx top-level domain பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும். .xxx top-level domain என்பது com, org, net என்பதுக்கே ஆகும். சமூக சீர்கேடாக்க கூடிய பல ஆபாச வலைதளங்கள் top-level domain தான் உள்ளது. ஏனைய சாதாரண வலைத்தளங்கள் போல இவைகளும் com, org, net போன்றtop-level domain பாவிப்பதுபெரிய தலையிடியாக உள்ளது. உதாரணமாக: ஒரு பேருந்தில் சாதாரண மக்களுடன் சின்னம்மை நோயளர் செல்வுதுப்போல, பிள்ளைகள் இந்த மாதிரி அபாச தளங்களுக்கு எதிர்பாராதவிதமாக உள்நூழயக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம், காரணம் தாம் எப்போதும் உலாவும் வலைத்தளத்தின் முகவரியை ஒரு எழுத்து பிழையாக தட்டபட்டாலும் இதுப்போல அபாச வலைத்தளங்களுக்கு கொண்டுச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இதானல் இது ஒரு பெரும் சிக்கலாகவே காணப்படுகிறது.இதுப்போன்ற வலைத்தளங்களை நிறுவனங்களில் Network System Administration கள் மற்றும் வலைப்பின்னல் வசதியாளிப்போர் புறகனிக்க முயன்றாலும் இது ஒரு கடினமான காரியமாகவே தெரிகிறது. எப்படியாவது புறகனிக்கப்பட்டாலும் அதனால் ஏனைய அரோக்கியமான தளங்களும் இதனால் பாதிப்படைகிறது.

இவ்வகையான வலைத்தளங்களை ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் நல்லது என .xxx ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இவ்யோசனை முன் வைக்கப்பட்ட போதும் பல தரப்பட்ட சிக்கல்களும் பலரின் தலையீடு காரணமாக இடை நிறுத்தப்பட்டது. ஆனாலும் என்னை பொருத்தவரை இவ்வகையான யோசனை மிகவும் வரவேற்கதக்கதே ஆகும். இவ்வகையான அபாச தளங்கள் .xxx கீழ் ஒன்று இணைக்கப்பட்டால் சுற்றுப்புறச்சூழல் சுத்தமாக வைப்பதற்கு சமம். அதாவது ஒரளவேனும் சமூக சீர்கேடுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். com, org, net ஆகியவற்றில் இருந்து விலகினால் அபாச தளங்களின் சீர்கேட்டில் இருந்து வளர்ந்து வரும் சமூகம் மற்றும் இந்த அபாச தளங்களை வெறுப்பவருக்கு இது நன்மையை பயக்கும். என்ன செய்ய இந்த அபாச தளங்களும் சட்டத்தால் அணுமதிக்கப்பட்டதே!

இதை ICAAN முற்று முழூதாக அனுமதிக்கவில்லை, ஆயினும் வேகுவிரைவில் அனுமதிக்கூடும். இது இனையத்தின் உள்ள பல சிக்கல்களை அவிழ்த்து பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என் பதில் எந்தவித ஐயமுமில்லை!

Windows பாவித்து நம் நாட்டில் சிங்களவர்கள் உருவாக்கிய கணனி விளையாட்டே ஓமியாகும். இது ஓமி விளையாட்டு பிரியவருக்கு சிறந்த மென்பொருள் என்பதை சொல்லத்தேவையில்லை. நம் நாட்டின் நிர்மானிக்கப்பட்ட இதைப்பற்றி நான் இந்த வலைப்பதிவிலிலே தெரிந்துக்கெண்டேன் . அவருக்கு என் நன்றி அத்துடன் இந்த விளையாட்டை linux இல் விளையாடுவதைப்பற்றி அறிந்துக்கொள்வோம்.

இது Ms Windows சில் செயற்பட ஒழுங்கமைக்கபட்டது. Linux க்காக நிர்மானிக்கப்படுவது இன்னும் சில காலத்தில் வெளியிடப்படும் என இதை உருவாக்கிய சாலிய சாகோதரர் கூறுகிறார். அதனால் இது linux சில் செயற்ப்படுவதற்காக wine என்ற மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் fedora பாவிப்பராயின் இதை பின்பற்றவும், நீங்கள் உபுன்டு அல்லது ஏனைய linux distribution பாவிப்பராயின் அதற்கு எற்றதுப்போல package manager பாவித்து நிறுவிக்கொள்ளவும். Wine download செய்துக்கொள்ள இணையவசதி தேவை ஆனாலும் லங்காநேட் லினக்ஸ்ஸில் wine உள்ளது. 🙂

Wine நிறுவிக்கொள்ளும் முறை

 1. System -> Administration -> Add/Remove Software திறந்துக்கொள்ளவும்.
 2. கீழே காட்டப்பட்டுள்ளதுப்போல இடதுப்புறத்தில் தேடல் (search) பகுதியில் wine என வகையிட்டு (type) செய்து தேடல் அழியை அழுத்தவும்.
 3. இப்போது வலதுப்புறத்தில் காட்டும் மென்பொருள் பட்டியலில் wine -1 **** என்று காட்டப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் சரி (√) அடையாளம் இடவும்.
 4. இப்போது அதற்கு கீழ்இருக்கும் Apply Button யை அழுத்துவும்.

இப்போது wine நிறுவப்பட்டுவிட்டப்பிறகு , கணனியை restart பண்ணுவது மிக முக்கியமானதாகும்.

wine னில் sounds செயற்ப்பட வைத்தல். படத்தை கவனிக்கவும் (மேலதிக வேலை ஆனாலும் தேவைப்படுவது)

 1. Application -> Wine -> Wine Configuration திறந்துக்கொள்ளவும்.
 2. அதில் இருக்கும் audio பகுதியை தெரிவுச்செய்துக்கொள்ளவும்.
 3. இப்போது Sound Drivers கீழ் இருக்கும் PulseAudio Driver முன்னால் இருக்கும் சிறிய கட்டத்தைசரி (√) அடையாளம் இடவும்.
 4. Apply buttonயை அழுத்தவும், நிறுவப்பட்டுவிட்டது , தேவையானால் கணனியை restart செய்துக்கொள்ளவும்.
 5. Sound கேட்கிறதா என தெரிந்துக்கொள்வதற்கு திறும்பவும் 1ம், மட்டும் 2ம் படி முறையை பின்பற்றி Test Sound button அழுத்தி பார்க்கவும்.

முதலில் ஓமி விளையாட்டை தறவிறக்கம் செய்துக்கொள்வோம். (Version 1.09 latest)

 1. இப்போது rar கோப்புவை extract செய்துக்கொள்ளவும்.
 2. கீழே காட்டியதுப்போல திறந்துக்கொள்ளவும்.

தறவிறக்கம் செய்துக்கொண்ட exe file மேல் right click செ.ய்து “Open with wine windows program loader” தெரிவுச்செய்துக்கொள்ளவும்.

இப்போது ஒமி விளையாட்டு திறக்கப்படும், விளையாடலாம்.

ஓமி விளையாட தெரியாவிட்டால் யாரிடமாவது கேட்டு தெரிந்துக்கொள்ளnலாம்.  🙂

அன்பான வேண்டுக்கொள்: இந்த வலைப்பதிவுவில் இருந்து எதாவது கட்டுரை உங்கள் தேவைக்காக தொகுக்கப்படுவதாயின் இந்த வலைப்பதிவில் தொகுக்கப்பட்டது என தெரிவிப்பதில் பின்வாங்க வேண்டாம்.

1 comment

இன்று நான் உங்களுக்கு Easylife for fedora ஒத்த இன்னும் ஒன்றை அறிமுகப்படுத்தப்போகிறேன்.

இது சிரிய மென்பொருளைக்கொண்டு எமக்கு தேவையான பலவற்றை நிறுவிக்கொள்ளாம் அல்லது (uninstall)அதை நிராகரித்துக்கொள்ளலாம். ஆனாலும் என் வலைபதிவில் Easylife நிறுவிக்கொள்ள மட்டுமே முடியும் அங்கு (uninstall) இல்லை. கீழே காணப்படும் படங்களை (screen shots) பார்த்தவுடனே புரிந்துக்கொள்ளலாம், இந்த மென்பொருள் Autoten என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதோடு நல்ல gui இருக்கிறது.

இன்னும் நீங்கள் தெரிந்துக்கொள்ளக்க வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. Easylife / Autoten இவை இரண்டையும் ஒருசேர நிறுவிக்கொள்ள முடியாது. இரண்டிலில் ஒன்றை தான் தெரிவுச்செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டல் என்னைப்போல முதலில் Easylife பாவித்து தேவையானவற்றை நிறுவிக்கொண்டு பிறகு Easylife யை uninstall பண்ணிக்கொள்ளவும். பிறகு Autoten யை நிறுவிக்கொண்டு தமக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம். இவை இரண்டிலும் வேலை ஒன்றே தான் ஆனாலும் இவை இரண்டுமே வேவ்வேறு பட்ட மென்பொருட்களை நிறுவிக்கொள்ள உதவுகிறது. உதாரணமாக எடுத்துக்கொண்டால் Easylife மூலம் google picasa வையும் Autoten மூலம் google Earth யையும் நிறுவிக்கொள்ளலாம். இதைப்போல சில மாற்றங்கள் உள்ளது. பாவித்து தான் பாருங்களே! அதைப்போல Fedora பாவிப்பவர்களை இதைப்பற்றி அறிவுறுத்தவும்.

இது ஒரு திறந்த மூலநிரலாகும் ஆகவே இது பரமரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டாம். இதைப்பற்றி அறியாதவர்களை அறிவுறுத்துவது கடமையாகும். கடமையை சரியாக செய்யவிட்டால் அது தன்டணைக்குரிய குற்றம் என யாரும் மொழியவில்லை என்னை தவிர 🙂 ”

Autoten பாவித்து என்ன என்ன நிறுவிக்கொள்ள முடியம் என பார்க்கலாம்.

இதோ Autoten நிறுவிக்கொள்வதற்கான terminal லின் வழிமுறைகள் அதாவது command: முதலில் நீங்கள் root user ராக terminal க்கு உள்நுழயவும். பிறகு கீழை காணப்படும் வரியை பிரதி எடுத்து terminal லில் பதியவும் அதாவது paste பண்ணவும்.பிறகேன்ன Enter keyயை அழுத்தவும்.

rpm -Uvh http://dnmouse.org/autoten-4.6-5.fc13.noarch.rpm

நீங்கள் நிறுவிக்கொண்ட பின் இங்கே காட்டியதுப்போல ஒரு icon யை உங்கள் desktop காட்டும்.

இப்போது இதில் வேலை வாங்குவதைப்பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

Iconமேல் click செய்து திறந்துக்கொள்ளவும்.
இப்போது பயனர் கடவுச்சொல்லைக்கொடுக்கவும்.
கீழை காட்டியவாறு மென்பொருட்கள் திறக்கப்படும்.

 • Install என்பதற்கு கீழே காணப்படும் மென்பொருளும் codecs அதில் மென்பொருளில் பெயரை click செய்து நிறுவிக்கொள்ளலாம்.
 • About டின் info botton அழுத்துதன் மூலம் மென்பொருளின் நிறுவலுக்கான script பார்த்துக்கொள்ளலாம். (இது சந்தேக பிராணிகளுக்கு!) 🙂
 • Uninstall லில் இருக்கும் Remove button அழுத்துவதன் மூலம் நீக்கவேண்டியவைகளை நீக்கி கொள்ளலாம்.
 • Status வில் மென்பொருட்களையும் /codec நிறுவப்பட்டுள்ளதா என பார்க்கலாம்.

நீங்கள் எதாவது ஒன்றை (உதாரணமாக Skype) Autoten பாவித்து நிறுவிக்கொண்டால், Autoten close பண்ணி விட்டு திரும்ப Autoten திறந்து மென்பொருள் சரியாக நிறுவப்பட்டுயிருக்கிறதா என Status பார்த்துக்கொள்ளலாம். அப்போது Status சில் installed என காட்டும்.

Autoten பற்றிய மேலதிக தகவல்களை அறிய http://dnmouse.org இந்த இனையமுகவரியை நாடவும்.
அன்புடையீர்,

லங்காநேடினால் உங்களுக்காக இலவசமாக பகிர்ததளித்த Fedora 13 இம்முறை பல சிக்கல்கள் காரணமாக தபாலினால் அனுப்பும் பணி இடைநிருத்தப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்கிறோம். ஆனாலும் விரும்பமாவர்கள் எங்கள் நிலயத்திற்கு வருகை தந்து Fedora 13 தட்டை பெற்றுக்கொள்ளலாம்.

உங்களுக்கு வருகை தர முடியாதாயின் Fedora இனையத்தளதின் விண்ணப்படிவத்தை பூர்த்திச்செய்து வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளலாம். ஆனாலும் உங்கள் விண்ணப்பங்கள் எற்று அதை தபாலில் அனுப்ப தொண்டு நிறுவனம் முன்வந்தால் மாதிரமே அதை உங்களால் பெறமுடியும்.எங்கள் முகவரி:
லங்காநேட்,
153, = சரணங்கர வீதி,
தேஹிவளை.

நான் வீட்டில் பாவிக்கும் கணனி pentium 3 பழைய கணனியாகும். இதில் இருக்கும. Ram னின் அளவு 256 mb, proccer speed 800mhz ஆகும். இதுவரைக்கும் பாவித்த இயங்குத்தளம் TeenPup Linux. இதை Puppy Linux எனவும் கூறலாம்.

என் கணனிக்கு fedora 13 நிறுவிக்கொண்டால் எல்லா வேலைகளையும் இலகுவாக செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 128mb ram card தேடினேன். கடைசியில் ஒருவழியாக 128mb ram card ஒன்றை தேடி கணனிக்கு பொருத்தினேன். இப்போது ram கொள்ளளவு 348mb ஆகும். அதனால் fedora 13 Dvdயை கணனிக்கு உட்ச்செலுத்தி boot ஆகினேன். எப்படியாவது அதிகமான நேரம் எடுக்காமல், சீக்கிரமாகவே boot யாகியது.

ஆரம்பித்திலிருந்தே text mode லில் தான் நிறுவப்பட்டது. மென்பொருள் நிறுவும் போதே customize (அதாவது வேண்டிய மென்பொருட்களை தெரிவுச்செய்து நிறுவுதல்) செய்துக்கொள்வேன் என எண்ணிக்கொண்டு நகரவிட்டேன். ஆனாலும் software customization ( or You may call it custom selection) திரை வரவில்லை. அதறக்கு பதிலாக நேரடியாக மென்பொருள்கள் நிறுவப்பட்டுக்கொண்டுயிருந்து. 20 நிமிடத்தில் நிறுவல் முடிந்தது. அதைப்போல் dvd வெளியேற்றப்பட்டு Reboot செய்யவும் என்ற செய்தி வந்தது. Reboot முடிவில் terminal திரை தென்பட்டது. graphical desktop காட்டவில்லை. இதற்க்கான காரணம் fedora 13 னில் graphical desktop திரையை காட்ட போதுமான Ram இருக்காதது தான்.


எனக்கு terminal வீடு போல ஆனாலும் வீட்டுவேலைச்செய்ய Graphical desktop தேவைப்பட்டது. அதனால் இதற்கான ஒரே ஒரு தீர்வாக இருந்து மேலதிகமாக Ram சேர்ப்பது தான், நான் உடனடியாக fedora 13 system requirements பார்த்தேன். அதில் Graphical desktop நிறுவ Ram 512mb தேவைப்படும் என இருந்தது. இப்போது என்ன செய்வது என் கணனியில் இருப்பது Ram slots3ஆகும். ஆனாலும் தேவைப்படுவது SDRam தேடல் துவங்கியது! அடுத்த நாள் காரியாலத்தில் எப்படியோ 64mb Ram ஒன்றை எடுத்து கொண்டுச்சென்றேன். “நடப்பவை எல்லாம் நல்லதுக்கேஎன்ற அடிப்படையில் பொருத்தினேன், இப்போது Ramஅளவு 448mbஆகும். ஆனாலும் இன்னும் 64mb குறையுதே! என்னவோ நடக்கும் நல்லதே நடக்கும் அதனால் fedora 13 நிறுவல் ஆரம்பிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம்!! என் தேவைக்கேற்ப 40 நிமிடத்திற்குள் நிறுவல் முடிந்தது. அதன் பிறகு எந்த குழருப்படி இன்றி நன்றாக தன் கடமையை செய்தது. GUI பாவிக்கும் போது processor வேகம் குறைவாக இருந்தது. ஆனாலும் பரவாயில்லை! அதன் பிறகு mp3,dvd, பாவிக்கmultimedia codecs தேவைப்பட்டது. Nokia கைப்பேசியை பாவித்து இவைகளை போட்டுக்கொண்டால் விற்கப்படுவதால், வித்தியாசமான யோசனை தோன்றியது.

ஒரு புதிய முயற்சி!

கணனியில் இருக்கும் Hard disk யை கலட்டி எடுத்து கொண்டுச்சென்று, என் வேலைதளமான LankaNet நிறுவனத்தில் இருக்கும் Core 2 duo கணனியில் பொருத்தி boot ஆகினேன். நான் நினைத்ததுப்போல் அல்லாது அது நன்றாகவே செயற்ப்பட்டது.

அப்போதே Network Manager யை restart பண்ணி எங்களின் network அதாவது இணையத்துடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். இனி எதற்காகவும் தயங்காமல் எனக்கு தேவையான மென்பொருட்களை Easylife போட்டு நிறுவிக்கொண்டேன்.

பிறகேன்ன hard diskயை கலட்டி வீட்டுக்கொண்டு என் கணனியில் பொருத்தினேன். எந்த குழப்பமும் இன்றி நன்றாக சமத்தாவேலைச்செய்தது.

இதை நீங்களும் முயற்சி செய்துப்பார்க்கவும். இந்த முறை முற்றுமுழுதாக எல்லோறுடைய கணனியும் செயற்ப்படலாம் அல்லது சிலருக்கு மட்டும் நல்ல பலனையளிக்கும் என நம்புகிறேன். என்னால் 100வீதம் ஒப்புதல் அளிக்கமுடியாவிடினும் முயற்சி செய்துப்பார்கவும், இனைய வசதி இல்லாதவர்கள் முதலில் உங்கள் கணனிக்கு fedora 13 நிறுவி பிறகு hard disk கலட்டி இணைய வசதி இருக்கும் கணனிக்கு பொருத்தி தமக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம். பிறகேன்ன நீங்களும் fedora 13 பாவிக்கலாம்.

கடைசியில் என் தேவை தீர்தது!


 1. பழைய கணனிக்கு Fedora 13 நிறுவிக்கொண்டேன்.

 2. எனக்கு தேவையானவற்றை இணையவசதி இருக்கும் இடத்தில் கொண்டுச்சென்று நிறுவிக்கொண்டேன்.

ஒரு புதிய முயற்சி!

கணனியில் இருக்கும் Hard disk யை கலட்டி எடுத்து கொண்டுச்சென்று, என் வேலைதளமான LankaNet நிறுவனத்தில் இருக்கும் Core 2 duo கணனியில் பொருத்தி

boot ஆகினேன். நான் நினைத்ததுப்போல் அல்லாது அது நன்றாகவே செயற்ப்பட்டது.

அப்போதே Network Manager யை restart பண்ணி எங்களின் network அதாவது இணையத்துடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். இனி எதற்காகவும் தயங்காமல் எனக்கு தேவையான மென்பொருட்களை easylife போட்டு நிறுவிக்கொண்டேன்.

பிறகேன்ன hard diskயை கலட்டி வீட்டுக்கொண்டு என் கணனியில் பொருத்தினேன். எந்த குழப்பமும் இன்றி நன்றாக சமத்தாவேலைச்செய்தது.

இதை நீங்களும் முயற்சி செய்துப்பார்க்கவும். இந்த முறை முற்றுமுழுதாக எல்லோறுடைய கணனியும் செயற்ப்படலாம் அல்லது சிலருக்கு மட்டும் நல்ல பலனையளிக்கும் என நம்புகிறேன். என்னால் 100வீதம் ஒப்புதல் அளிக்கமுடியாவிடினும் முயற்சி செய்துப்பார்கவும், இனைய வசதி இல்லாதவர்கள் முதலில் உங்கள் கணனிக்கு fedora 13 நிறுவி பிறகு hard disk கலட்டி இணைய வசதி இருக்கும் கணனிக்கு பொருத்தி தமக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம். பிறகேன்ன நீங்களும் fedora 13 பாவிக்கலாம்.

கடைசியில் என் தேவை தீர்தது!

 1. பழைய கணனிக்கு நிறுவிக்கொண்டேன்.

 2. எனக்கு தேவையானவற்றை இணையவசதி இருக்கும் இடத்தில் கொண்டுச்சென்று நிறுவிக்கொண்டேன்.

Fedora 11 பாவித்து போதும்போதும் என ஆகிவிட்டது. Fedora 13 install பண்ணினால் நல்லது என எனக்கு தோன்றியது. அதை install பண்ண பல காரணங்கள் உள்ளது.

என் மடிக்கணணியில் Bluetooth device, fedora 11 ஒழுங்காக இயங்காதது. அதைப்போல என் கையடக்கதொலைப்பேசியினூடாக இணையத்தில் உளாவும் போது பல பிரச்சனைக்கு முகம் கொடுக்க நேர்ந்தது.

Triple boot டாக பாவித்த Ms Windows Vista, Fedora 11 இதனுடன் லங்காநேட் லினக்ஸ் (உபுன்டு 9.4) இவைகளின் Ms Windows Vista இயக்கி இருக்க மற்றைய இரண்டு இயங்குத்தளத்தையும் நீக்கினேன். இப்படி இவைகளை நீக்க Ranish Partition manager software பாவித்தேன். மடிக்கணனியுடன் Vista இயங்குதளம் இருந்தனால் அதை நீக்கவில்லை. அது மட்டும் அல்ல உபுன்டு போடவும் இடம் இருந்தது.

இப்போது Fedora 13 நிறுவல் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு தேவையான மாதிரி partition செய்துக்கொண்டு மட்டுமல்லாது எனக்கு விரும்பிய மென்பொருட்களையும் தெரிவுச்செய்துக்கொண்டு நிறுவபட்டுவிட்டது.

பிறகு bluetooth icon panel லில் தென்பட்ட போது தான் மனதிற்கு திருப்த்தியை தந்தது. ஒருவழியா ஒரு வேலை முடிந்த மாதிரி. இப்போது எனக்கு இலகுவாக என் கையடக்கதொலைப்பேசியில் இருந்து கோப்புக்களை அனுப்பக்கூடியதாக இருந்தது. அதைப்போல panel லில் இருக்கும் Network manager icon னை click செய்து wireless narrowband connection (கையடக்கத்தொலைப்பேசியியான Nokia பாவித்து).இதனூடாக இனையத்தின் மற்றைய வேலைகளை முடிக்க முடியும், முடித்தால் பிறகு நான் ஆண்டியாகி விடுவேன் phone bill கட்டியே.

பிறகு Easylife போட்டுக்கொண்டு அதனூடாக multimedia codecs மற்றும் ஏனைய மென்பொருட்களை நிறுவிக்கொண்டேன்.

இதில் என்ன அப்படி புதிதாக இருக்கிறது என பார்க்கலாம்

  1. Deja Dup Backup tool இதின் மூலம் நம்முடைய கோப்புகளை பாதுக்காத்துக்கொள்ள முடியும்.

  2. பலவகையான Printer பாவிப்பராயின் அதற்கு drivers install பண்ணத்தேவையில்லை. அதில் Printerஇலகுவாக செய்ற்படும்.

  3. Scanner (வருடி) க்குகாக மிகவும் இலகுவான எளிய simple scan என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  4. Nvidia Graphic cards நன்றாக செயற்படுகிறது, இதில் லினக்ஸ் செயற்பட வேறாக driver ஒன்றை சேர்த்துள்ளன.

  5. Btrfs மூலம் கணனியின் முன்னைய நிலைமைக்கு கொண்டு செல்லும். இது Rollback மென்பொருள் அல்லது Windows restore utility மாதிரியாகும்.

  6. Gimp உபுன்டு 10.04வில் இல்லாதொலிக்கப்பட்டாலும் Fedoraவில் இருக்கிறது.

உங்கள் கவனத்திற்க்கு :-  பயனர் ubuntu வின் password : lankanet

மேலதிக விபரங்களுக்கு லங்கா நேட் தொடர்புக்கொள்ளவும்:

தொலைப்பேசி: . +94-11-2726340
இணையத்தளம்:  www.lankanet.org
மின்அஞ்சல் முகவரி: lankanet@slt.lk

நீங்கள் லங்காநேட்  லினக்ஸ் பாவிப்பவராயின் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கவும். உங்களின் அயல்வர் மற்றும் லங்காநேட் லினக்ஸ் பிரியோர் அனைவருக்கும் பிரதிகளை பகிர்ந்தளிக்கவும். மேலதிக தகவலுக்கு எங்களின் மின்அஞ்சல் மற்றும் தொலைப்பேசி அணுகவும். இது ஒரு  லங்கா நேட்டின் படைப்பின்  இலவச பகிர்ந்தளிப்பாகும்.

இது ஒரு முற்றுமுழுதான இலவச படைப்பாகும். விற்பனைக்கு அல்ல, ஆனால் பிரதிகளை எடுத்து பகிர்ந்தளிக்கலாம்.
இதைப்பற்றி மேலதிகமாய் பயிற்சிபெற விரும்புவோர் எங்களை நாடவும் .

-Tharaka Weerasekara
-தாரக வீரசேகர
http://tharaka-lankanet.blogspot.com
www.lankanet.tk

Tamil unicode support. இங்கே நீங்கள் தமிழில் வகையீடும் போது  bash யையும் Startup Applications list உட்செலுத்த தேவையில்லை. அது நம்மால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

Internet Menu

Graphics Menu

Scribus, Openoffice.org Calc, VLC player running together with Macslow’s cairo clock and AWN Dock

Accessories Menu

Desktop cube (Compiz)

இத்தனை நாளாக நன்றாக பாவித்த Avast மென்பொருள் இப்போது இந்த error செய்து காட்டுகிறதா?


Avast antivirus திறக்க முடியவில்லை தானே ? அப்படியானால் இதை எப்படி சரிசெய்துக்கொளவது?? இணையத்தில் இதை பற்றி தகவல்களை பெற கஸ்பட்டாலும், இப்போது இதற்கான தீர்வு பெறப்பட்டேன்! இதோ தீர்வுக்கான வழி முறைகள்.

Redhat/Fedora லினக்ஸ் பாவிப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

1. உங்கள் terminal ளை திறந்து கொள்ள இவ்வழியை பின்பற்றவும்.

Applications-> System Tools-> Terminal அல்லது Applications->   Accessories->     Terminal

2. இப்போது root பயனராக  உள்நூழைவதற்கு

command :su –( Enter ரை தட்டவும் பிறகு root னின் password கொடுக்கவும்)

3. இந்த command type பண்ணவும்.
gedit /etc/rc.local (Enter
ரை தட்டவும்)

4. இப்போது gedit text editor ரை திறக்கவும்.

5. அந்த கோப்பின்(file) முடிவின் கீழே காட்டப்பட்டுள்ள வரியைசேர்க்கவும். (கவனமாக சேர்கவும்!) echo 128000000 >/proc/sys/kernel/shmmax

6. இப்போது இந்த கோப்பை save பண்ணி close பண்ணவும்.

7.  உங்கள் கணணியை restart பண்ணவும்.(இப்போது நீங்கள் இலகுவாக Avast  antivirus திறக்க முடியும்.)

  Ubuntu/LankaNet.Org/Debian பாவிப்பவர்கள் இவ்வழியை பின்பற்றவும்

  1. உங்கள் terminal ளை திறந்து கொள்ள இவ்வழியை பின்பற்றவும்.

Applications-> System Tools-> Terminal

  2. இந்த command யை கொடுக்கவும்: ( கவனித்துக்கொள்ளவும்!)
  sudo gedit /etc/init.d/rcS (Enter ரை தட்டவும் பிறகு password யை கொடுக்கவும்)

  3. அந்த கோப்பினுள் கீழே காணப்படும் வரியை தெரிவுச்செய்துக்கொள்ளவும். exec /etc/init.d/rc S (exec முன்னால் இருக்கும் வரியை தேடிக்கொள்ளவும்)

  4.இப்போது அந்த வரிக்கு மேலே இருக்கும் வரியான கீழே  காணப்படும் வரியை சேர்த்துக்கொள்ளும்.(echo 128000000 >/proc/sys/kernel/shmmax)

5. இப்போது இந்த கோப்பை save பண்ணி close பண்ணவும்.