இத்தனை நாளாக நன்றாக பாவித்த Avast மென்பொருள் இப்போது இந்த error செய்து காட்டுகிறதா?


Avast antivirus திறக்க முடியவில்லை தானே ? அப்படியானால் இதை எப்படி சரிசெய்துக்கொளவது?? இணையத்தில் இதை பற்றி தகவல்களை பெற கஸ்பட்டாலும், இப்போது இதற்கான தீர்வு பெறப்பட்டேன்! இதோ தீர்வுக்கான வழி முறைகள்.

Redhat/Fedora லினக்ஸ் பாவிப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றவும்.

1. உங்கள் terminal ளை திறந்து கொள்ள இவ்வழியை பின்பற்றவும்.

Applications-> System Tools-> Terminal அல்லது Applications->   Accessories->     Terminal

2. இப்போது root பயனராக  உள்நூழைவதற்கு

command :su –( Enter ரை தட்டவும் பிறகு root னின் password கொடுக்கவும்)

3. இந்த command type பண்ணவும்.
gedit /etc/rc.local (Enter
ரை தட்டவும்)

4. இப்போது gedit text editor ரை திறக்கவும்.

5. அந்த கோப்பின்(file) முடிவின் கீழே காட்டப்பட்டுள்ள வரியைசேர்க்கவும். (கவனமாக சேர்கவும்!) echo 128000000 >/proc/sys/kernel/shmmax

6. இப்போது இந்த கோப்பை save பண்ணி close பண்ணவும்.

7.  உங்கள் கணணியை restart பண்ணவும்.(இப்போது நீங்கள் இலகுவாக Avast  antivirus திறக்க முடியும்.)

  Ubuntu/LankaNet.Org/Debian பாவிப்பவர்கள் இவ்வழியை பின்பற்றவும்

  1. உங்கள் terminal ளை திறந்து கொள்ள இவ்வழியை பின்பற்றவும்.

Applications-> System Tools-> Terminal

  2. இந்த command யை கொடுக்கவும்: ( கவனித்துக்கொள்ளவும்!)
  sudo gedit /etc/init.d/rcS (Enter ரை தட்டவும் பிறகு password யை கொடுக்கவும்)

  3. அந்த கோப்பினுள் கீழே காணப்படும் வரியை தெரிவுச்செய்துக்கொள்ளவும். exec /etc/init.d/rc S (exec முன்னால் இருக்கும் வரியை தேடிக்கொள்ளவும்)

  4.இப்போது அந்த வரிக்கு மேலே இருக்கும் வரியான கீழே  காணப்படும் வரியை சேர்த்துக்கொள்ளும்.(echo 128000000 >/proc/sys/kernel/shmmax)

5. இப்போது இந்த கோப்பை save பண்ணி close பண்ணவும்.