என்ன குழப்பமாக இருக்கிறதா? காப்பியும் டீயையும் பற்றி போசுகிறேன் என நினைக்க வேண்டாம்.

இது RatHat நிறுவனதின் ஒரு புதிய முயற்சி. Java நிரலாக்க மொழி (Programming language) யாவரும் அறிந்த ஒன்றே, ஆனால் பதிலாக பாவிக்ககூடிய புதிய நிரலாக்க மொழி (Programming language) யை Ceylon எனும் பெயரில் அறிமுகப்படித்தியுள்ளனர். இது Java இல்லை என்று கூறினாலும் அப்படியில்லாமல் இல்லை. இது Runtime லில் செயற்படுவதால் எந்தவோறு JVM எழுதும் நிகழ்ச்சி நிரலையையும் செயற்படுத்த முடியுமாம். இப்போது Java வில் வேலை செய்பவர்களுக்கு அங்கு எற்படும் சிற்சில குழப்பங்களை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு ceylon நிரலாக்க மொழி ஒரு சிறந்த மாறுதலாக அமையலாம். இதில் Java வில் காணப்படும் class library பதிலாக புதிய class library அறிமுகப்படுத்தியுள்ளனர் அத்துடன் Java syntax பாவிக்க முடியும்.

இன்னும் compiler யை 2011 முடிவுக்கு முன் வெளியிட தீர்மானித்துள்ளனர், அத்துடன் இதை Java வை விட செயற்படுத்துவதற்கும், கற்பதற்கும் இலகுவான முறையில் மாற்ற எண்ணியுள்ளனர். எனவே இது Java நிரலாக்க மொழி பாவிப்பவர்களுக்கும்,புதிதாக நிரலாக்க மொழியை கற்க விரும்புவோருக்கும் நல்ல செய்தியாகும் என நம்புகிறேன்.

மேலதிக தகவல்களுக்கு – http://en.wikipedia.org/wiki/Ceylon_Project
http://www.infoworld.com/d/application-development/red-hats-ceylon-language-unneeded-tempest-in-teapot-558?page=0,1