திறந்த மூல நிரல் மென்பொருளையும் விற்பனைக்காக காணப்படும் மென்பொருளையும் பகுப்பாய்வு செய்தோம் ஆனால் இவை இடையே பல வேறுப்பாடுகளை காணலாம். ஒரே பணியை செய்யக்கூடிய இரு வேறு மென்பொருட்கள் எடுத்துக்கொண்டோம் ஆனால் அவை இரண்டுக்கும் இடை பல நல்ல தீய குண அதிசயங்களை காணலாம்.

நாம் இதை உதாரணத்துடன் உற்று நோக்குவோம்

முதலில் Ms Office யும் Openoffice.org அல்லது Libreoffice என அறிமுகப்படுத்தப்படும் மென்பொருட்களைப்பற்றி பார்ப்போம்.

Ms office லி ல் இருக்கும் வசதிகளில் 80% மான வசதிகள் Open office லிலும் காணலாம். ஆனாலும் Open office லில் சுயமான சில வசதிகளையும் தருகிறது. எப்படியாயினும் நமது தேவைகளை இவை இரண்டிலுமே பூர்த்திச்செய்துக்கொள்ளலாம்.சிலருக்கு பாவனையின் போது MS office மட்டுமே மிக இலகுவானதாக தோன்றும் ஆனாலும் இவை இரண்டினதும் விலையை ஒப்பீடு செய்துப்பார்த்தால் open office க்குதான் வெற்றி. அறிதான Open office இலவசமாக கிடைக்கும் போது MS office காக அதிகமான பணத்தை செலவிட வேண்டி உள்ளது. Sun நிறுவனம் Oracle லிடமிருந்து வாங்கியப்பிறகு Open office அனுசரனை சம்பந்தமாகாக பிரச்சனை எற்பட்டு இருக்கிறது. ஆனாலும் Open office இல்லாமல் போகும் என பிரச்சனை எழாது. இப்போது libreoffice என வெளியிடப்பட்டுள்ளது. source code பொதுவாக வெளியிடப்பட்டுள்ளதால் யாவரும் பெற்றுக்கொண்டு மாற்றங்களுக்கு உட்படுத்த முடிவதால் open source அருகிவருகிற பிரச்சனையில் இருந்து விடுப்பட்டுள்ளது என்பதும் உதாரணமாக கொள்ளலாம்.

Adobe photoshop பும் Gimp பற்றி பார்த்தோமானால் photoshop புதிய தனிப்பயனாக்கியதில் 50%ம் Gimp இல்லாவிட்டாலும் Gimp னின் புதிய வெளியிட்டில் Ram குறைந்த கணனியிலும் இயக்கலாம். photoshopக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது ஆனாலும் Gimp இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இலவசமாக கிடைக்கும் Gimp ஒரு சிறந்த photoshop முன்னோடியாகும்.

Corel draw/illustrator ருக்கு பதிலாக பாவிக்கக்கூடிய ஒரு சிறந்த தெரிவாக Inkscapeயை கூறலாம்.ஆனாலும் மேலே சுட்டிக்காட்டிய மென்பொருட்களை போன்று Corel draw/illustrator விட வசதிகள் குறைவாகவே உள்ளது.

நாம் பொதுவாக காணக்கூடியதாக இருப்பது திறந்த மூலநிரல் மென்பொருட்களின் பாவனையின் வசதிகள் குறைவாக காணப்பட்டாலும் அதன் நிலையான தன்மையும் தெளிவிலும் எதற்கும் இரண்டாம் பட்சம் இல்லை என்பதாகும். அனபோதும் மாற்றத்திற்கு உட்படுத்தி மீள் நிர்மாணிக்க செலவு செய்ய தேவையில்லாதே இதன் முக்கியத்துவமாகும். Gnu/Linux, Apache யுடன் server களுக்கு பாவிக்கப்படும் மென்பொருட்கள் Php, Firefox மற்றும் பலவற்றை தோற்கடிக்க விற்பனைக்கு இருக்கும் மென்பொருட்களுக்கு முடியவில்லை.

Bugs இல்லாவுட்டால் தோசம்?

இவ் உலகத்தில் காணப்படும் எல்லா மாதிரியான மென்பொருட்களிலும் bugs என்ற இந்த தோசம் ஒன்றாவது இல்லாம் இல்லை.திறந்த மூல நிரல் அதற்கு விதி விளக்கு அல்ல! திறந்த மூல நிரலிலிலும் bugs என்ற தோசம் 1வது இருக்கத்தான் செய்கிறது. நாம் திறந்த மூல நிரலிலுள்ள நன்மை தீமையை ஆராய்வதற்கு முன் இன்றை காலக்கட்டத்தில் பாரிய அளவில் செலவில் வாங்கி பாவிக்கப்படும் மென்பொருட்கள் எதாவது தோசத்தை கண்டுக்கொண்டோம் என்றால் அதற்கான தீர்வாக,

 • நீங்கள் முதலாவதாக இதைப்பற்றி முறையீடு செய்வீர்கள் பின், அவர்கள் இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தறுவார்கள் என எண்ணியிருத்தல்.

 • அவர்கள் இதற்கான தீர்வைப்பெற்றுதருவார்கள் என திருப்பவவும் எதோ ஒரு நம்பிக்கையில் இருப்பீர்கள்.

 • மூன்றாவதாக அவ் மென்பொருளின் மறுசீலமைப்பின் பதிப்பிற்க்கு அதிகமான செலவு எற்படாது என நம்பியிருத்தல்.

 • நாங்காவதாக அவ் பதிப்பில் தோசம் இல்லாம் புத்தம் புதிய விஷங்களும் வரும் என எதிர்பார்த்தல்.

 • இவ் நிறுவனம் நட்டம் அடையாது, முடப்படாது எனவும் எதிர்பார்த்தல்

  இவைகளை கவனிக்கையில் திறந்த மூலநிரல் மென்பொருட்களின் வசதி வாய்ப்பு குறைவு என குறைக்கூறுவது எந்த விதத்தில் நியாயம்??

  மென்பொருட்களின் பாதுகாப்பு தன்மை அல்லது வழிநடத்தல்.

சிறந்த மென்பொருட்கள் உற்பத்தி செய்த சில நிறுவனங்கள் மூடப்பட்ட தன் காரணம் அல்லது குறை நுகர்வோரின் கவனமின்மை அல்லது கைவிட்டமை. இல்லாவிட்டல் அந்த நிருவனத்தை விற்ற பின் அவ் நிருவனத்தை வாங்கியோர் அந்த மென்பொருளின் உற்பத்தியை இடை நிறுத்தி நுகர்வோரை கைவிட்டமை. இதற்கு சில உதாரணமாக

Neoworks நிருவனம் McAfee கொள்வனவு செய்து Neotrace என்ற மென்பொருளை இடைநிறுத்தியமை, Macromedia நிருவனத்தினால் Adobeயிடம் கொள்வனவுச்செய்த Fontographer மென்பொருளை கைவிட்டமை இவைகளை சுட்டிக்காட்டலாம்.

புரட்சிகாரர்கள்!

தன் மென்பொருளை Open source மாற்றி மக்களிடம் வழங்கியவர்களும் உண்டு. இதற்கு பல பல காரணங்களிலினால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த முடிவினால் மென்பொருட்களின் நிலை உயர்ந்ததுடன் புதிய பரினாமத்திற்கு மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 1. Netscape நிருவனத்தினால் Netscape Navigator opensource மாற்றி Firefox என

  மாற்றியமைத்தமை.

 2. Blender மென்பெருளை விற்பனை நோக்கில் உருவாக்கி அதை Open source மாற்றியமை.

 3. Sun Star officeயை open source மாற்றி openoffice.org வாக வெளியிட்டமை.

 4. Eudora open source மாற்றி Penelope வாக மாற்றியமை.

GNUவும் GNA

GNU,GNAகுழுவும் வேவ்வோறு குழுக்களாக காணப்பட்டாலும் இவை ஒன்றே என எண்ணலாம்.ஆனாலும் அது உண்மையல்ல.GNUகுழு தாம் உருவாக்கும் மென்பொருளின் மூலக்குறியீடை (source code) எல்லோருக்கும் பொதுவானதாக பகிர்தளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே.இது fossஅதாவது free (Libre Open Source Software) என கூறுவர்.ஆனால் GNA குழு தாம் மென்பொருளின் மூலக்குறியீடை வழங்காமல், மென்பொருளை மட்டும் Compile பண்ணி இலவசமாக வழங்கினால் பொதுமானதே என்ற அடிப்படையிலாகும். இதற்கு Freeware எனவும் கூறலாம்.இது எதுவானல் இவையிரண்டுமே செய்வது மென்பொருட்களை எமக்கு இலவசமாக வழங்குவதல் நம்மைப்போல எழைக்கு பெறுமதியே ஆகும்.ஆனாலும் இது நம்மில் எத்தனை பெயருக்கு அறிகிறார்கள் மென்பொருட்களின் source code வழங்குவதால் எவ்வளவு நன்மை என்பது கேள்விக்குறியே?!
இதில் இன்னும் முடிக்க பெறாத திறந்த மூலநிரல் மென்பொருட்களும் காணப்படுகிறது. இதில் முதலாவதாக Open source software கூறலாம். இதை GNU சமூகம் 1984 தொடங்கியது ஆனால் இன்னும் இதை முடிவுக்கு கொண்டுவராத GNU Hurd ஆகும். GNU Hurd என்பது இயங்குதளம்(operating system) ஆகும். இதில் இன்னும் பணிகளை நிறைவு செய்யாததால் ஏனைய மென்பொருட்களின்(Gnu utilities) பணியை தொடர 1991ல் Linus Torvald உருவாக்கிய Linux kernel பாவிக்கின்றனர்.இதைப்பற்றி GNU இனையதளத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. GNU Hurd முடிவுக்கு கொண்டு வந்தால் மற்றை இயங்குதளங்களை பின்தல்லிவிட்டு ஒரு சிறந்த இயங்குதளமாவதில் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.


எதிர்காலம்?

திறந்த மூல நிரல் மென்பொருட்களை உருவாக்குவதற்காக ஒரு பாரிய சமூகம் எதுவித எதிர்பார்ப்பும் இன்றி தானாகவே முன் வந்து சுயேச்சையான சேவையாற்றுகிறார்கள். இப்பணிக்காக பெரும்பாலானோர் ஒய்வுக்காலத்தையே செலவிட்டுகின்றன. இதில் சிலபேர் மட்டுமே தமது முழு நேரத்தையும் இதற்காக செலவிடுகின்றனர். இதனால் இதற்காக பண உதவி செய்து பரிபூரணமாக முழு நேர பணிக்காக செலவிட்டால் இவ் திறந்த நிரல் முலப்பொருள் ஏனைய மென்பொருட்களை விட சிறந்ததாகவும் இன்றைய கால கட்டத்தில் இல்லா மென்பொருட்களையும் உருவாக்க முடியும்.

திறந்தமுல நிரல் மென்பொருளாயின் ஏனைய விற்பனை சந்தையில் காணப்படும் மென்பொருளாயும் இதன் முக்கியத்துவமாக நாம் செய்யும் காரியம் ஒன்றே என்பதாகும்.இலவசமாகவும்,அதிக பொருட் செலவின்மையாலும் இதன் பாவனை மற்றும் காலத்தை சேகரிக்கவும் நாம் இதற்கு ஒத்துழைப்பை வழங்கினால் இதை ஒரு சிறந்த நிலைக்கு இட்டுச்செல்லாம் என்பதில் ஐயம் இல்லை. இனியும் கால நேரத்தை வீண் செய்யாது, திறந்த மூலநிரல் மென்பொருளின் பாவனையை தொடங்கவும். ஆரம்பத்தில் கடினமாக இருப்பதால் விட்டுவிடாமல் இருக்க பிடித்து மேலே செல்லுவோம். வாருங்கள் அனைவரும் அணிதிறள்வோம் இப்போது விட்டு விட்டு பிறகு விட்டத்தை பார்த்து பிரயோசனம் இல்லை.