நான் இன்று இங்கே அறிமுகப்படுத்த போவது 150பில்லியன் இனைய பக்கங்களைக் கொண்டு சுருக்கப்பட்ட இனையதள சேமிப்பு அறை அல்லது இனைய நூலகம். இங்கே நீங்கள் எந்த ஒரு தளத்திலும் ஆரம்ப வடிவமைப்பிலிருந்து பார்த்துக்கொள்ளலாம். உதாரணமாக google.com யை ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரைக்கும் அவ்தளம் என்ன என்ன மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கு என்பதையை அறியலாம். அங்கு 1998ல் இருந்து வருட மாத மாற்றங்களுக்கு உட்படுத்தி வெளியிட்ட இனையதளங்களை பார்க்கலாம். அதைப்போல இப்போது இனையத்தில் இல்லாத பழைய வலைத்தளங்களையும் பார்வையிடலாம். கீழே காணப்படும் படத்தை பார்த்தால் ஒரளவு புரிந்துக்கொள்ளலாம். இவ் சேவையை www.archive.org என்ற தளம் வெகுக்காலமாக தெடர்ந்துக்கொணடுள்ளது. இது எல்லோரும் தேவைப்படுகிற பிரயோசனமான சேவையாகும்.எனக்கும் மிகவும் பயனுள்ள தளமாகவே அமைகிறது.

இது மட்டும் அல்லாது இவ் தளம் இன்னும் நிறைய சேவைகளை வழங்குகிறது,ஆனாலும் நான் இவ்தளத்தை நூலகமாக மட்டுமே அறியத்தந்தேன். இவ் தளத்தை பற்றி மேலதிகமாக www.archive.org தளத்திற்கே விரைந்து பாருங்கள்.

கீழே காட்டியவாறு இவ் தளத்திற்கு விரைந்து Wayback Machine என்ற கட்டத்தில் நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தின் முகவரியை வகையிடவும் பிறகு Take me back ஆழியை அழுத்தவும்.

கீழே காட்டியவாறு lankanet.org type பண்ணி Take me back button அழுத்தியவுடன் இதோ கிடைத்த பெறுப்பேறு, அங்கே 1998இல் இருந்து lankanet.org நிறுவனத்தில் இனையப்பக்கங்களை பார்வையிடலாம்.

கீழே காணப்படப்படும் படத்தில் google.com இனையத்தளம் மாற்றமடைந்த காலத்திற்கு அமைய links காட்டுகிறது.

இங்கே Google.com ஆரம்பிக்கப்பட்ட காலத்தின் இனையதள பக்கத்தை காணலாம். நீங்கள் உற்று கவனித்தால் லினக்ஸ் பற்றி தேடுவதற்கு ஒரு பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இங்கே yahoo.com இனையத்தளத்தில் தேடல் ஆரம்ப நிலை காணலாம்.

இப்படி நீங்கள் விரும்பிய இனையத்தள பக்கங்களை பார்வையிடலாம், இனையமும் மற்றும் இனையதளங்களிலும் அதன் பழைய இதிகாசங்களை பற்றிய தெரிந்துக்கொள்ள விரும்புவோருக்கு மிக சிறந்த தளமாகும்.