இணையத்தளங்களுக்கு உலாவரும் நீங்கள் அதில் அறிமுகப்படுத்தப்படும் புதிய இணையவசதிகளைப்பற்றி அறிவதில் ஆர்வமாக இருப்பீர்கள். அப்படி என்றால் அவசியமாக .xxx top-level domain பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும். .xxx top-level domain என்பது com, org, net என்பதுக்கே ஆகும். சமூக சீர்கேடாக்க கூடிய பல ஆபாச வலைதளங்கள் top-level domain தான் உள்ளது. ஏனைய சாதாரண வலைத்தளங்கள் போல இவைகளும் com, org, net போன்றtop-level domain பாவிப்பதுபெரிய தலையிடியாக உள்ளது. உதாரணமாக: ஒரு பேருந்தில் சாதாரண மக்களுடன் சின்னம்மை நோயளர் செல்வுதுப்போல, பிள்ளைகள் இந்த மாதிரி அபாச தளங்களுக்கு எதிர்பாராதவிதமாக உள்நூழயக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம், காரணம் தாம் எப்போதும் உலாவும் வலைத்தளத்தின் முகவரியை ஒரு எழுத்து பிழையாக தட்டபட்டாலும் இதுப்போல அபாச வலைத்தளங்களுக்கு கொண்டுச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இதானல் இது ஒரு பெரும் சிக்கலாகவே காணப்படுகிறது.இதுப்போன்ற வலைத்தளங்களை நிறுவனங்களில் Network System Administration கள் மற்றும் வலைப்பின்னல் வசதியாளிப்போர் புறகனிக்க முயன்றாலும் இது ஒரு கடினமான காரியமாகவே தெரிகிறது. எப்படியாவது புறகனிக்கப்பட்டாலும் அதனால் ஏனைய அரோக்கியமான தளங்களும் இதனால் பாதிப்படைகிறது.

இவ்வகையான வலைத்தளங்களை ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் நல்லது என .xxx ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இவ்யோசனை முன் வைக்கப்பட்ட போதும் பல தரப்பட்ட சிக்கல்களும் பலரின் தலையீடு காரணமாக இடை நிறுத்தப்பட்டது. ஆனாலும் என்னை பொருத்தவரை இவ்வகையான யோசனை மிகவும் வரவேற்கதக்கதே ஆகும். இவ்வகையான அபாச தளங்கள் .xxx கீழ் ஒன்று இணைக்கப்பட்டால் சுற்றுப்புறச்சூழல் சுத்தமாக வைப்பதற்கு சமம். அதாவது ஒரளவேனும் சமூக சீர்கேடுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். com, org, net ஆகியவற்றில் இருந்து விலகினால் அபாச தளங்களின் சீர்கேட்டில் இருந்து வளர்ந்து வரும் சமூகம் மற்றும் இந்த அபாச தளங்களை வெறுப்பவருக்கு இது நன்மையை பயக்கும். என்ன செய்ய இந்த அபாச தளங்களும் சட்டத்தால் அணுமதிக்கப்பட்டதே!

இதை ICAAN முற்று முழூதாக அனுமதிக்கவில்லை, ஆயினும் வேகுவிரைவில் அனுமதிக்கூடும். இது இனையத்தின் உள்ள பல சிக்கல்களை அவிழ்த்து பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என் பதில் எந்தவித ஐயமுமில்லை!