தமக்கு தேவையான மென்பெருட்களை install பண்ணும் போது உள்ள பலவிதமான Repositories சேர்த்துக்கொள்வதற்க்கு பலவிதமான இன்னல்களையும் காலவீண் விரயப்படுவது, Ubuntu பாவிக்கும் எல்லோருக்கும் உள்ள பிரச்சனையாகும்.

லங்காநேட் லினக்ஸ் பாவிப்பவர்கள் அல்லாது Ubuntu download பண்ணி பாவிப்பவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகும். ஆனாலும் இன்று அறிமுகப்படுத்தப்போகும் shell script லில் இவைகளை இலகுவாக செய்யலாம்.

இதை எவராலும் இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம். இது நான் முதலில் அறிமுகப்படித்திய EasyLife for Fedora போல தான்.

Skype, Multimedia codecs/Players, Google earth, Flash player, Java, Hulu, k3b இவை இதில் install பண்ணக்கூடிய சில மென்பொருட்க்கள்.

Install பண்ண முடியாத மென்பொருட்களை இதில் இலகுவாக install பண்ணிக்கொள்ளமுடியும்.

வழிமுறைகளையும் படங்களையும் பின்பற்றவும்

  1. இதில் (34.5KB சிறிய கோப்பு)
  2. இப்போது இந்த கோப்பிவின் மேல் Right click செய்யவும்.

3.இப்போது executable செய்துக்கொள்ளவும்.


4. இப்போது அந்த கோப்புவை Double click செய்து Run அழியை அழுத்தவும்.

5. இப்போது Ok button னை அழுத்தவும்.

6. இப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை இதில் தெரிவுச்செய்து Ok button யை அழுத்தவும். ( இப்போது இந்த இடத்தில் உங்களுக்கு இனணய உதவி தேவை)எவ்வளவு இலகுவான காரியம்.