இன்று நான் உங்களுக்கு Easylife for fedora ஒத்த இன்னும் ஒன்றை அறிமுகப்படுத்தப்போகிறேன்.

இது சிரிய மென்பொருளைக்கொண்டு எமக்கு தேவையான பலவற்றை நிறுவிக்கொள்ளாம் அல்லது (uninstall)அதை நிராகரித்துக்கொள்ளலாம். ஆனாலும் என் வலைபதிவில் Easylife நிறுவிக்கொள்ள மட்டுமே முடியும் அங்கு (uninstall) இல்லை. கீழே காணப்படும் படங்களை (screen shots) பார்த்தவுடனே புரிந்துக்கொள்ளலாம், இந்த மென்பொருள் Autoten என்ற பெயரில் அறிமுகப்படுத்துவதோடு நல்ல gui இருக்கிறது.

இன்னும் நீங்கள் தெரிந்துக்கொள்ளக்க வேண்டிய முக்கியமான விடயம் உள்ளது. Easylife / Autoten இவை இரண்டையும் ஒருசேர நிறுவிக்கொள்ள முடியாது. இரண்டிலில் ஒன்றை தான் தெரிவுச்செய்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டல் என்னைப்போல முதலில் Easylife பாவித்து தேவையானவற்றை நிறுவிக்கொண்டு பிறகு Easylife யை uninstall பண்ணிக்கொள்ளவும். பிறகு Autoten யை நிறுவிக்கொண்டு தமக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம். இவை இரண்டிலும் வேலை ஒன்றே தான் ஆனாலும் இவை இரண்டுமே வேவ்வேறு பட்ட மென்பொருட்களை நிறுவிக்கொள்ள உதவுகிறது. உதாரணமாக எடுத்துக்கொண்டால் Easylife மூலம் google picasa வையும் Autoten மூலம் google Earth யையும் நிறுவிக்கொள்ளலாம். இதைப்போல சில மாற்றங்கள் உள்ளது. பாவித்து தான் பாருங்களே! அதைப்போல Fedora பாவிப்பவர்களை இதைப்பற்றி அறிவுறுத்தவும்.

இது ஒரு திறந்த மூலநிரலாகும் ஆகவே இது பரமரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டாம். இதைப்பற்றி அறியாதவர்களை அறிவுறுத்துவது கடமையாகும். கடமையை சரியாக செய்யவிட்டால் அது தன்டணைக்குரிய குற்றம் என யாரும் மொழியவில்லை என்னை தவிர 🙂 ”

Autoten பாவித்து என்ன என்ன நிறுவிக்கொள்ள முடியம் என பார்க்கலாம்.

இதோ Autoten நிறுவிக்கொள்வதற்கான terminal லின் வழிமுறைகள் அதாவது command: முதலில் நீங்கள் root user ராக terminal க்கு உள்நுழயவும். பிறகு கீழை காணப்படும் வரியை பிரதி எடுத்து terminal லில் பதியவும் அதாவது paste பண்ணவும்.பிறகேன்ன Enter keyயை அழுத்தவும்.

rpm -Uvh http://dnmouse.org/autoten-4.6-5.fc13.noarch.rpm

நீங்கள் நிறுவிக்கொண்ட பின் இங்கே காட்டியதுப்போல ஒரு icon யை உங்கள் desktop காட்டும்.

இப்போது இதில் வேலை வாங்குவதைப்பற்றி அறிந்துக்கொள்ளலாம்.

Iconமேல் click செய்து திறந்துக்கொள்ளவும்.
இப்போது பயனர் கடவுச்சொல்லைக்கொடுக்கவும்.
கீழை காட்டியவாறு மென்பொருட்கள் திறக்கப்படும்.

  • Install என்பதற்கு கீழே காணப்படும் மென்பொருளும் codecs அதில் மென்பொருளில் பெயரை click செய்து நிறுவிக்கொள்ளலாம்.
  • About டின் info botton அழுத்துதன் மூலம் மென்பொருளின் நிறுவலுக்கான script பார்த்துக்கொள்ளலாம். (இது சந்தேக பிராணிகளுக்கு!) 🙂
  • Uninstall லில் இருக்கும் Remove button அழுத்துவதன் மூலம் நீக்கவேண்டியவைகளை நீக்கி கொள்ளலாம்.
  • Status வில் மென்பொருட்களையும் /codec நிறுவப்பட்டுள்ளதா என பார்க்கலாம்.

நீங்கள் எதாவது ஒன்றை (உதாரணமாக Skype) Autoten பாவித்து நிறுவிக்கொண்டால், Autoten close பண்ணி விட்டு திரும்ப Autoten திறந்து மென்பொருள் சரியாக நிறுவப்பட்டுயிருக்கிறதா என Status பார்த்துக்கொள்ளலாம். அப்போது Status சில் installed என காட்டும்.

Autoten பற்றிய மேலதிக தகவல்களை அறிய http://dnmouse.org இந்த இனையமுகவரியை நாடவும்.