நான் வீட்டில் பாவிக்கும் கணனி pentium 3 பழைய கணனியாகும். இதில் இருக்கும. Ram னின் அளவு 256 mb, proccer speed 800mhz ஆகும். இதுவரைக்கும் பாவித்த இயங்குத்தளம் TeenPup Linux. இதை Puppy Linux எனவும் கூறலாம்.

என் கணனிக்கு fedora 13 நிறுவிக்கொண்டால் எல்லா வேலைகளையும் இலகுவாக செய்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 128mb ram card தேடினேன். கடைசியில் ஒருவழியாக 128mb ram card ஒன்றை தேடி கணனிக்கு பொருத்தினேன். இப்போது ram கொள்ளளவு 348mb ஆகும். அதனால் fedora 13 Dvdயை கணனிக்கு உட்ச்செலுத்தி boot ஆகினேன். எப்படியாவது அதிகமான நேரம் எடுக்காமல், சீக்கிரமாகவே boot யாகியது.

ஆரம்பித்திலிருந்தே text mode லில் தான் நிறுவப்பட்டது. மென்பொருள் நிறுவும் போதே customize (அதாவது வேண்டிய மென்பொருட்களை தெரிவுச்செய்து நிறுவுதல்) செய்துக்கொள்வேன் என எண்ணிக்கொண்டு நகரவிட்டேன். ஆனாலும் software customization ( or You may call it custom selection) திரை வரவில்லை. அதறக்கு பதிலாக நேரடியாக மென்பொருள்கள் நிறுவப்பட்டுக்கொண்டுயிருந்து. 20 நிமிடத்தில் நிறுவல் முடிந்தது. அதைப்போல் dvd வெளியேற்றப்பட்டு Reboot செய்யவும் என்ற செய்தி வந்தது. Reboot முடிவில் terminal திரை தென்பட்டது. graphical desktop காட்டவில்லை. இதற்க்கான காரணம் fedora 13 னில் graphical desktop திரையை காட்ட போதுமான Ram இருக்காதது தான்.


எனக்கு terminal வீடு போல ஆனாலும் வீட்டுவேலைச்செய்ய Graphical desktop தேவைப்பட்டது. அதனால் இதற்கான ஒரே ஒரு தீர்வாக இருந்து மேலதிகமாக Ram சேர்ப்பது தான், நான் உடனடியாக fedora 13 system requirements பார்த்தேன். அதில் Graphical desktop நிறுவ Ram 512mb தேவைப்படும் என இருந்தது. இப்போது என்ன செய்வது என் கணனியில் இருப்பது Ram slots3ஆகும். ஆனாலும் தேவைப்படுவது SDRam தேடல் துவங்கியது! அடுத்த நாள் காரியாலத்தில் எப்படியோ 64mb Ram ஒன்றை எடுத்து கொண்டுச்சென்றேன். “நடப்பவை எல்லாம் நல்லதுக்கேஎன்ற அடிப்படையில் பொருத்தினேன், இப்போது Ramஅளவு 448mbஆகும். ஆனாலும் இன்னும் 64mb குறையுதே! என்னவோ நடக்கும் நல்லதே நடக்கும் அதனால் fedora 13 நிறுவல் ஆரம்பிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம்!! என் தேவைக்கேற்ப 40 நிமிடத்திற்குள் நிறுவல் முடிந்தது. அதன் பிறகு எந்த குழருப்படி இன்றி நன்றாக தன் கடமையை செய்தது. GUI பாவிக்கும் போது processor வேகம் குறைவாக இருந்தது. ஆனாலும் பரவாயில்லை! அதன் பிறகு mp3,dvd, பாவிக்கmultimedia codecs தேவைப்பட்டது. Nokia கைப்பேசியை பாவித்து இவைகளை போட்டுக்கொண்டால் விற்கப்படுவதால், வித்தியாசமான யோசனை தோன்றியது.

ஒரு புதிய முயற்சி!

கணனியில் இருக்கும் Hard disk யை கலட்டி எடுத்து கொண்டுச்சென்று, என் வேலைதளமான LankaNet நிறுவனத்தில் இருக்கும் Core 2 duo கணனியில் பொருத்தி boot ஆகினேன். நான் நினைத்ததுப்போல் அல்லாது அது நன்றாகவே செயற்ப்பட்டது.

அப்போதே Network Manager யை restart பண்ணி எங்களின் network அதாவது இணையத்துடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். இனி எதற்காகவும் தயங்காமல் எனக்கு தேவையான மென்பொருட்களை Easylife போட்டு நிறுவிக்கொண்டேன்.

பிறகேன்ன hard diskயை கலட்டி வீட்டுக்கொண்டு என் கணனியில் பொருத்தினேன். எந்த குழப்பமும் இன்றி நன்றாக சமத்தாவேலைச்செய்தது.

இதை நீங்களும் முயற்சி செய்துப்பார்க்கவும். இந்த முறை முற்றுமுழுதாக எல்லோறுடைய கணனியும் செயற்ப்படலாம் அல்லது சிலருக்கு மட்டும் நல்ல பலனையளிக்கும் என நம்புகிறேன். என்னால் 100வீதம் ஒப்புதல் அளிக்கமுடியாவிடினும் முயற்சி செய்துப்பார்கவும், இனைய வசதி இல்லாதவர்கள் முதலில் உங்கள் கணனிக்கு fedora 13 நிறுவி பிறகு hard disk கலட்டி இணைய வசதி இருக்கும் கணனிக்கு பொருத்தி தமக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம். பிறகேன்ன நீங்களும் fedora 13 பாவிக்கலாம்.

கடைசியில் என் தேவை தீர்தது!


  1. பழைய கணனிக்கு Fedora 13 நிறுவிக்கொண்டேன்.

  2. எனக்கு தேவையானவற்றை இணையவசதி இருக்கும் இடத்தில் கொண்டுச்சென்று நிறுவிக்கொண்டேன்.

ஒரு புதிய முயற்சி!

கணனியில் இருக்கும் Hard disk யை கலட்டி எடுத்து கொண்டுச்சென்று, என் வேலைதளமான LankaNet நிறுவனத்தில் இருக்கும் Core 2 duo கணனியில் பொருத்தி

boot ஆகினேன். நான் நினைத்ததுப்போல் அல்லாது அது நன்றாகவே செயற்ப்பட்டது.

அப்போதே Network Manager யை restart பண்ணி எங்களின் network அதாவது இணையத்துடன் தொடர்புபடுத்திக்கொண்டேன். இனி எதற்காகவும் தயங்காமல் எனக்கு தேவையான மென்பொருட்களை easylife போட்டு நிறுவிக்கொண்டேன்.

பிறகேன்ன hard diskயை கலட்டி வீட்டுக்கொண்டு என் கணனியில் பொருத்தினேன். எந்த குழப்பமும் இன்றி நன்றாக சமத்தாவேலைச்செய்தது.

இதை நீங்களும் முயற்சி செய்துப்பார்க்கவும். இந்த முறை முற்றுமுழுதாக எல்லோறுடைய கணனியும் செயற்ப்படலாம் அல்லது சிலருக்கு மட்டும் நல்ல பலனையளிக்கும் என நம்புகிறேன். என்னால் 100வீதம் ஒப்புதல் அளிக்கமுடியாவிடினும் முயற்சி செய்துப்பார்கவும், இனைய வசதி இல்லாதவர்கள் முதலில் உங்கள் கணனிக்கு fedora 13 நிறுவி பிறகு hard disk கலட்டி இணைய வசதி இருக்கும் கணனிக்கு பொருத்தி தமக்கு தேவையானதை நிறுவிக்கொள்ளலாம். பிறகேன்ன நீங்களும் fedora 13 பாவிக்கலாம்.

கடைசியில் என் தேவை தீர்தது!

  1. பழைய கணனிக்கு நிறுவிக்கொண்டேன்.

  2. எனக்கு தேவையானவற்றை இணையவசதி இருக்கும் இடத்தில் கொண்டுச்சென்று நிறுவிக்கொண்டேன்.