இடைமுமான Gnome 3 பெரிதாக யாரும் விரும்புவதில்லை அதனால் இதோ Mint லினக்ஸ் குழுமத்தினால் புதிதாக அறிமுக படித்தியிருக்கும் இடைமுகமே இந்த Cinnamon  ஆகும். இந்த இடைமுகம் Gnome 2 இடைமுகத்திற்கு ஒத்ததாகும். இந்த இடைமுகம் Mint லினக்ஸ்க்கு  மட்டுமே என பலர் நினைக்கிறார்கள் ஆனாலும் இதை Ubuntu 11.10, Fedora 16, OpenSUSE 12.1, Arch Linux, மற்றும் Gentoo என்ற லினக்ஸ் வகைகளுக்கும் இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய முறையில் இதை ஒழுங்குமைத்துள்ளனர்.

இதில் முதலாவதாக  மூன்று விதமான தோற்றம் உள்ளது. இதை உங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்வதற்கும் மற்றும் வேவ்வேறு themes மற்றும் Effects பயன்படுத்தவும் முடியும்.

 

இவைகளை கீழே காணலாம்.

இவைகளை தறவிறக்கம் செய்துக்கொள்ளவும், நிருவத்தற்குரியவும் ஆலோசனைகளை இவ் இனையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 

மேலே உள்ள படம் அடிப்படை தோற்றமாகும்.

மேலே உள்ள படம் “classic” தோற்றமாகும்.

மேலே உள்ள படம் “flipped” தோற்றமாகும்.

மேலே காட்டியவாறு இவைகளின் தோற்றத்தை நீங்கள் விரும்பியவாறு மாற்றி அமைக்கலாம்.

Oracle மூலம் sun நிறுவனம் வாங்கிய Open office.org என்னவாகும் என்ற பிரச்சனை தலை தூக்கியது . இதற்காக உழைத்த குழு Oracle விழகிய பிறகு libreoffice என பெயர் மாற்றப்பட்டது இது அறிந்த விடயமே. இப்போது கிடைத்த புதிய தகவலுக்கமைய Apache, Oracleலிடமிருந்து Open office.org வாங்கி அதற்கு அனுசரனை வழங்கப்ப போகிறதாம். அதாவது இதற்கு ஒரு சிறந்த எதிர்காலம் உருவாக்கப்போகிறதாம்.

Oracle நிறுவனத்திடம் இருந்த Open office.org யை Libreoffice கொடுக்காது வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்தது புதுமையே ஆனாலும் இவை முடிவாகிவிட்டது.

(பார்கலாம்! எது சிறந்ததாக போகிறது Openoffice.org vs libreoffice தெரிவிப்பது நாங்களாயினும் தீர்மானிக்க போவது நீங்களே 🙂 )

என்ன குழப்பமாக இருக்கிறதா? காப்பியும் டீயையும் பற்றி போசுகிறேன் என நினைக்க வேண்டாம்.

இது RatHat நிறுவனதின் ஒரு புதிய முயற்சி. Java நிரலாக்க மொழி (Programming language) யாவரும் அறிந்த ஒன்றே, ஆனால் பதிலாக பாவிக்ககூடிய புதிய நிரலாக்க மொழி (Programming language) யை Ceylon எனும் பெயரில் அறிமுகப்படித்தியுள்ளனர். இது Java இல்லை என்று கூறினாலும் அப்படியில்லாமல் இல்லை. இது Runtime லில் செயற்படுவதால் எந்தவோறு JVM எழுதும் நிகழ்ச்சி நிரலையையும் செயற்படுத்த முடியுமாம். இப்போது Java வில் வேலை செய்பவர்களுக்கு அங்கு எற்படும் சிற்சில குழப்பங்களை விட்டு வெளியேற நினைப்பவர்களுக்கு ceylon நிரலாக்க மொழி ஒரு சிறந்த மாறுதலாக அமையலாம். இதில் Java வில் காணப்படும் class library பதிலாக புதிய class library அறிமுகப்படுத்தியுள்ளனர் அத்துடன் Java syntax பாவிக்க முடியும்.

இன்னும் compiler யை 2011 முடிவுக்கு முன் வெளியிட தீர்மானித்துள்ளனர், அத்துடன் இதை Java வை விட செயற்படுத்துவதற்கும், கற்பதற்கும் இலகுவான முறையில் மாற்ற எண்ணியுள்ளனர். எனவே இது Java நிரலாக்க மொழி பாவிப்பவர்களுக்கும்,புதிதாக நிரலாக்க மொழியை கற்க விரும்புவோருக்கும் நல்ல செய்தியாகும் என நம்புகிறேன்.

மேலதிக தகவல்களுக்கு – http://en.wikipedia.org/wiki/Ceylon_Project
http://www.infoworld.com/d/application-development/red-hats-ceylon-language-unneeded-tempest-in-teapot-558?page=0,1

 

 

 

லங்காநேட் னூடாக நடத்தப்படும் சேவை பற்றிய ஒரு குறிப்பு. கீழே காணப்படும் துண்டு பிரசுரத்தைப் பார்க்கவும்.

 
 

 

அதிகமானேனார் லங்காநேட் லினக்ஸ் லில் Compiz Fusion ஏன் இல்லை வினவினார். அதற்கான காரணங்கள் பல உள்ளன, முக்கியமாக இந்த மென்பொருள் சில graphic cards களில் நுட்பமாக செயலாற்றாமை. லங்காநேட்லினக்ஸ் 3ல் Compiz Fusion இருக்கிறது ஆனாலும் அதை ஒழுங்குப்படுத்த compizconfig-settings-manager மட்டுமில்லை. முதலில் நாம் அதை பொற்றுக்கொள்வோம்.

compizconfig-settings-manager இங்கே தறவிறக்கம் செய்துக்கொள்ளாம். அந்த கோப்புவின் மீது double click செய்தால் நிறுவிக்கொள்ளமுடியும். (இது 623kb கொண்டது.)

இப்போது இதை நமக்கு எற்றதுப்போல் ஒழுங்குப்படுத்திக்கொள்வோம்

System->Preferences->Compizconfig settings manager போகவும்.

கீழே காட்டிவாறு திரை திறக்கப்படும்

1. மேலே காட்டியவாறு  Gnome Compatibility க்கும் KDE Compatibility சரி அடையாளம் இடவும்.

2. இப்போது Desktop cube சரி அடையாளம் இடவும், அதன்போது கீழே காணப்படுவதுப்போல் திரை திறக்கப்படும் இதில் Disable Desktop Wall அழியை அழுத்தவும்.

3. Rotate cube சரி அடையாளம் இடவும்.
4. கீழே காணப்படுவதுப்போல் Animations யும் Animations addons சரி அடையாளம் இடவும்.

Desktop யை பெட்டியாக மாற்றுவோம்
1. Rotate Cube மேல் அழுத்தவும்.
2. கீழே திரையில் காட்டியவாறு மாற்றங்களுக்கு உட்படுத்தவும்..

 • Raise on rotate சரி அடையாளம் இடவும்.
 • Acceleration டின் பெறுமதியை 2ற்கு குறைவான பெறுமதி இடவும்.
 • Zoom ன் பெறுமதியை 0.31 ஆகும்.

இப்போது பெட்டியயை சுற்றவும்.
CTRL யையும் ALT ஒன்றாக அழுத்திக்கொண்டு விசைப்பலகையின் left arrow  அல்லது Right Arrow அழியை அழுத்தவும்.

(இப்போது பெட்டி சரி….புதிய இன்னுமொரு Animations செய்துப்பார்போம்.)

Window யை close பண்ணும் போது தீ வெளியேறுவதுப்போல் Animation effect  ஒன்றை செய்துக்கொள்வோம்.

1. Animations மேல் click பண்ணவும்
2. கீழே திரையில் காட்டியவாறு Close Animation பகுதியை தெரிவுச்செய்துக்கொள்ளவும்.

3. கீழே திரையில் காட்டியவாறு அதன் பட்டியலில் முதலில் உள்ள தெரிவுச்செய்து Edit அழுத்தவும்.

4. பிறகு காட்டியவாறு மாற்றங்களுக்கு உட்படுத்தவும். நான் மாற்றியது.

 • Close effect: அதன் பட்டியலில் Burn தெரிவுச்செய்துக்கொண்டேன்.
 • Duration: 200 ராக அதிகரிக்கபட்டுள்ளது.

5. இப்போது இதை close செய்யவும்.
6. கடைசியாக compizconfig settings manager யையும் close செய்யவும்.

இதோ KDE படம்.

USB Dongle/கையடக்க தொலைப்பேசியினூடாக லங்காநேட் லினக்ஸ்சில் இனைய இணைப்பை பாவிக்கும் முறை

 1. உங்கள் Dongle அல்லது கையாடக்க தொலைப்பேசியின் ( USB cableனூடாக) இணைத்து Desktopபில் மேலாக உள்ள gnome panelலில் இருக்கும் iconயை மேல் காட்டியவாறு அழுத்தவும்.
 2. அதில் காட்டிடும் பட்டியலில் New Mobile Broadband (GSM) connection என காட்டும்.
 3. இப்போது New Mobile Broadband (GSM) connection தெரிவுச்செய்துக்கொள்ளவும்.

4. Forwardஅழியை அழுத்தவும்.

5. இப்போது மேலே காட்டியவாறு இலங்கையை தெரிவுச்செய்யவும்.

6.மேலே காட்டியவாறு நீங்கள் பாவிக்கும் இணைப்பின் பெயரை தெரிவுச்செய்யவும்

7.நீங்கள் பாவிக்கும் package தெரிவுச்செய்யவும்

8.இப்போது Apply அழியை அழுத்தவும்

9. அழியை அழித்தியவுடனே இணைய இணைப்பை பெறலாம்.

10. உங்கள் இணைய இணைப்பை துண்டிப்பதற்க்கு திரும்பவும் Gnome Panel சென்று disconnect அழியை அழுத்தவும்.

11. திரும்பவும் இணைய தொடர்ப்பை ஏற்படுத்த Gnome panel இருக்கும் மேல் காட்டியவாறு உங்கள் இணைப்பின் பெயர் மீது click பண்ணவும்

மேலே குறியதுப்போலவே தான் KDE இணைய இணைப்பை எற்படுத்த வேண்டும்.

என்ன கணணியை பாவிப்பதற்கு விருப்பமில்லையா? கணணியில் வைரஸ் தொல்லையா? அதனால் தான் லங்கா நேட் லினக்ஸ் பாவித்துப்பார்க்க சொல்கிறோம் ஆனாலும் இலவசம் என்பதினாலோ, பயத்தினாலோ பாவிக்கும் எண்ணம் வரவில்லை! என தெரியவில்லை? ஆனாலும் நீங்கள் மறக்க வேண்டாம் உலகத்தில் மீக் கணிப்பொறியில் 500 ரில் 459 கணனிக்கு லினக்ஸ் பாவிக்கின்றன. இதோ சாட்சி. உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இப்போது பாவிக்கும் மென்பொருளுக்கும், Operating systems பதிலாக இதை பாவிக்கலாம்.

எப்படி இதை பெருவது!
வசதியுள்ளோர் எமது தளத்தில் இறக்கி கொள்ளவும்.
வசதியற்றோருக்காக தாபல் மூலம் அனுப்பப்படும். இதைப்பற்றிய விளக்கம் முதந்திய கட்டுரையில் காணலாம்.

(நாம் எமது தபால் சேவையை :- அதாவது உங்கள் இணைய இணைப்பு!…Unlimited என கூறப்பட்டு இருந்தாலும் Limited, வரையறைக்கு உட்பட்டதால், Broadband என கூறப்பட்டிருந்தாலும் Narrowband connections உள்ளவர்களுக்கு மட்டும்.)

சிலர் தமது கோரிக்கையை முகவரியின்றி அணுப்பியுள்ளனர். அதனால் தயவுச்செய்து உங்கள் முகவரியை மறக்காமல் கூறிப்பிட்டு அணுப்பவும்.

இதோ அதில் சில படங்கள்:

Games Play பிரியோருக்கு அதிக அதிகமாக Games.

Graphic designing தேவையான அனைத்து மென்பொருட்களும் உள்ளன. இதில் Pencil என்பதில் Flash Animations செய்யலாம். AutoCad தொங்கி கொண்டு இருப்பவர்களுக்கு ஈடான Sagcad பாவிக்கலாம். இதைப்போல் Qcad வேண்டியவர்கள் Terminalலில் qcad என type செய்து பாவிக்கலாம்.களவுதனமாகவும் பாவிக்கலாம். ஆனால் இது (Qcad) Menuவில் காட்டாது.

இணயத்தில் வசிப்போருக்கு 🙂

இது LXDE Interface (இதோ LXDE வின்டஸ் XP/98 சலித்துப்போனோருக்களுக்காக

Office மென்பொருட்களை பாவிப்போருக்கும் விஷேஷம் உள்ளது!

உங்களுக்கு பிடித்ததுப்போல் Cliparts நிறைய உள்ளன, பாவித்துபார்கவும்

Software Development அல்லது Programming செய்பவர்களுக்காகவும, நீங்களும் எதாவது மென்பொருள் தாயாரித்தால் எனக்கும் காட்டவும். 🙂 இதே மாதிரி Web designing செய்யவும் முடியும்.

இதோ Guitar வாசிப்புக்கான ஒரு விளையாட்டு! “Frets on Fire”

இதில் wine இருப்பதால் வின்டோஸ்சில் மாத்திரம் இயங்கும் மென்பொருட்களும் install செய்துக்கொள்ளலாம். இங்கே காணப்படும் படத்தில் மதுர அகராதி லினக்ஸ்ஸில் இயங்குவதை காட்டுகிறது. இது தேவையானால் install செய்துக்கொள்ள Setup /usr/share/guides உள்ளது.

தம்பி தங்கைகள் உற்சாகமாக விளையாடிய Age of Empires இதில் Battle for Wesnoth உள்ளது .

இதோ Hand bill யையும் poster பிரதி எடுக்க கஸ்டப்படாமல் விரும்பியவாரு செய்துக்கொள்ள Scribus உள்ளது.

இதோ இவர் Adobe Dreamweaver போன்றவர். இவரை “Quanta” என அழைப்பர் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கவும்.

Multimedia பாவிப்போருக்கு, வெட்டிக்கொத்தி convert  செய்பவர்களுக்கு இங்கு வேண்டியவாறு மென்பொருட்கள் உள்ளன!

இதோ LankaNet.org Linux லில் XFCE செயற்படும் முறை! இதற்கு எவரை சார்ந்து இல்லாதவர் gnome” என கூறலாம்.

இப்படி Interfaces அல்லது இடைமுகத்தை மாற்றிக்கொள்ளலாம்.

 1. தமது Username மேல் click செய்யவும்.
 2. இப்போது கீழே காட்டப்பட்டுள்ள sessions என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான இடைமுகம் மேலே காட்டியவாறு தெரிவுச்செய்துக்கொள்ளவும்.
 3. இப்போது நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை உட்செலுத்தி Login ஆகலாம்!

இது CairoDock (no OpenGL) இதை பெற்றுக்கொள்ள Accessories மெனுவுக்கு செல்லவும். இங்கே மணிக்கூட்டை காட்ட Accessories மெனுவுக்கு சென்று MacSlow’s Cairo-Clock தெரிவுச்செய்துக்கொள்ளவும்.


🙂

இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி லங்காநேட் லினக்ஸ் 3 வெளியிடப்பட்டுள்ளது.இதை தறவிறக்கம் செய்துக்கொள்ள விரும்புவோர் எமது தளத்தில் தறவிக்கம் செய்துக்கொள்ளாம்.ஏனையவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு இலவசமாக உங்கள் இருவெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். உங்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க உங்களுக்கு ஏற்றதுப்போல் வடிவமைக்கபற்றுள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து மென்பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


இதில் உள்ள விஷேச தன்மை!

 1. LankaNet Linux KDE,LXDE,Gnome வும் XFCE லில் சமம். நீங்கள் kubuntu, Ubuntu, Xubuntu மற்றும் Lubuntu இவையெல்லாம் ஒரே இருவெட்டில் இருந்தால் என்ன எத்தனை முறை யோசித்து இருப்பீர்கள்? இதோ நாம் தருகிறோம் இதற்கான தீர்வை உங்கள் கனவு நனவாகிறது LankaNet Linux 3 ல்.இதில் உள்ள வசதி நீங்கள் விரும்பியவாறு Desktop Environment மாற்றி பாவிக்கக்கூடியதே ஆகும். மற்றும் இவைகளில் எதை வேண்டுமானலும் எப்போதும் பாவிக்கலாம்.
 2. Chromium web browser உள்ளடக்கப்பட்டுள்ளது.(Opera, Konquerer, Firefox இவைகளும் உள்ளன)
 3. Openoffice.org தவிர புதிதாகAbiword ம் Gnumeric Spreadsheet சேர்க்கப்பட்டுள்ளது
 4. Openoffice.Orb, Mozilla Thunderbird இவை இரண்டுக்கும் ஆங்கில இடைமுகம் (interface) போல சிங்கள இடைமுகமும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
 5. மென்பொருள் உற்பத்திக்காக பாவிக்கப்படும் IDEs உள்ளட்க்கப்பட்டுள்ளது. இதனுடன் Eclipse, Netbeans, Codelite, Anjuta, MonoDevelop, Gambas2 மற்றும் பலவற்றை உள்ளடக்கப்பட்டுள்ளது.
 6. Apache, Php, Mysql, Perl, Python இன்னும் பலவற்றை காணலாம்.
 7. உங்கள் வசதிக்காக Deja Dup backup tool உள்ளது.
 8. நீங்கள் இனையத்தில் உலாவரும் போது செலவிடப்படும் Bytes அளவிட netspeed applet உள்ளடக்கப்பட்டுள்ளது.
 9. நவம்பர் 19 திகதி வரைக்கும் வெளியிடப்பட்ட அனைத்து மென்பொருட்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 10. இரு கோப்புகளுக்கு இடையே அல்லது பல கோப்புகளுக்கு இடையே உள்ள வேறுப்பாட்டை பரிசீலனை செய்து பார்ப்பதற்கு Meld, Diffpdf, Kompare மென்பொருள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 11. Xmind யை நீக்கி அதற்கு பதிலாக Freemind யை உள்ளடக்கியுள்ளது.
 12. Opencliparts ஆயத்தப் படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. Open office க்கு அல்லது வேறு தேவைக்கு cliparts பாவிக்கலாம்.
 13. Firefox, Mozilla Thunderbird க்காக Adblock plus உள்ளடங்கியுள்ளது.
 14. Skype, Avast antivirus, Bitdefender Antivirus உள்ளது. இவை உங்களுக்கு தேவைப்படும் பட்ச்சத்தில் நிறுவிக்கொள்ளலாம். இதற்கான Intallation files இருக்கிறது. நீங்கள் இதில் இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி terminal ளுக்கு copy paste செய்வது மட்டும் போதுமானதே இனைய இணைப்பு தேவைப்பாடது.

இவை பற்றிய மேலதிக தகவல்களும் screenshots சும் மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

Minimum System Requirements
(
கீழே காணப்படுவதற்கு மேலதிகமாக உங்கள் கணனி இருந்தால் நல்லது என கருத்தில் கொள்க! 🙂 )

Ram: 512MB
Hard Disk Space: 10GB
Processor: 1000Mhz/1Ghz

உங்களுக்கு இதைப்பற்றி பயிற்சி தேவையா?

நாங்கள் பயிற்சியளிக்க தாயார்! நீங்கள்? மேலதிக தகவல்களை பெற எங்களை தொடர்புக்கொள்ளவும் 0112726340, இல்லாவிட்டால் எங்களுக்கு வரையவும்.மற்றும் உங்கள் நிறுவனத்திற்கு இதை நிறுவிக்கொள்ள லங்காநேட் நிறுவனத்தின் சேவையைப்பெற்றுக்கொள்ளவும்.


திறந்த மூல நிரல் மென்பொருளையும் விற்பனைக்காக காணப்படும் மென்பொருளையும் பகுப்பாய்வு செய்தோம் ஆனால் இவை இடையே பல வேறுப்பாடுகளை காணலாம். ஒரே பணியை செய்யக்கூடிய இரு வேறு மென்பொருட்கள் எடுத்துக்கொண்டோம் ஆனால் அவை இரண்டுக்கும் இடை பல நல்ல தீய குண அதிசயங்களை காணலாம்.

நாம் இதை உதாரணத்துடன் உற்று நோக்குவோம்

முதலில் Ms Office யும் Openoffice.org அல்லது Libreoffice என அறிமுகப்படுத்தப்படும் மென்பொருட்களைப்பற்றி பார்ப்போம்.

Ms office லி ல் இருக்கும் வசதிகளில் 80% மான வசதிகள் Open office லிலும் காணலாம். ஆனாலும் Open office லில் சுயமான சில வசதிகளையும் தருகிறது. எப்படியாயினும் நமது தேவைகளை இவை இரண்டிலுமே பூர்த்திச்செய்துக்கொள்ளலாம்.சிலருக்கு பாவனையின் போது MS office மட்டுமே மிக இலகுவானதாக தோன்றும் ஆனாலும் இவை இரண்டினதும் விலையை ஒப்பீடு செய்துப்பார்த்தால் open office க்குதான் வெற்றி. அறிதான Open office இலவசமாக கிடைக்கும் போது MS office காக அதிகமான பணத்தை செலவிட வேண்டி உள்ளது. Sun நிறுவனம் Oracle லிடமிருந்து வாங்கியப்பிறகு Open office அனுசரனை சம்பந்தமாகாக பிரச்சனை எற்பட்டு இருக்கிறது. ஆனாலும் Open office இல்லாமல் போகும் என பிரச்சனை எழாது. இப்போது libreoffice என வெளியிடப்பட்டுள்ளது. source code பொதுவாக வெளியிடப்பட்டுள்ளதால் யாவரும் பெற்றுக்கொண்டு மாற்றங்களுக்கு உட்படுத்த முடிவதால் open source அருகிவருகிற பிரச்சனையில் இருந்து விடுப்பட்டுள்ளது என்பதும் உதாரணமாக கொள்ளலாம்.

Adobe photoshop பும் Gimp பற்றி பார்த்தோமானால் photoshop புதிய தனிப்பயனாக்கியதில் 50%ம் Gimp இல்லாவிட்டாலும் Gimp னின் புதிய வெளியிட்டில் Ram குறைந்த கணனியிலும் இயக்கலாம். photoshopக்காக அதிகமாக செலவு செய்ய வேண்டி உள்ளது ஆனாலும் Gimp இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.இலவசமாக கிடைக்கும் Gimp ஒரு சிறந்த photoshop முன்னோடியாகும்.

Corel draw/illustrator ருக்கு பதிலாக பாவிக்கக்கூடிய ஒரு சிறந்த தெரிவாக Inkscapeயை கூறலாம்.ஆனாலும் மேலே சுட்டிக்காட்டிய மென்பொருட்களை போன்று Corel draw/illustrator விட வசதிகள் குறைவாகவே உள்ளது.

நாம் பொதுவாக காணக்கூடியதாக இருப்பது திறந்த மூலநிரல் மென்பொருட்களின் பாவனையின் வசதிகள் குறைவாக காணப்பட்டாலும் அதன் நிலையான தன்மையும் தெளிவிலும் எதற்கும் இரண்டாம் பட்சம் இல்லை என்பதாகும். அனபோதும் மாற்றத்திற்கு உட்படுத்தி மீள் நிர்மாணிக்க செலவு செய்ய தேவையில்லாதே இதன் முக்கியத்துவமாகும். Gnu/Linux, Apache யுடன் server களுக்கு பாவிக்கப்படும் மென்பொருட்கள் Php, Firefox மற்றும் பலவற்றை தோற்கடிக்க விற்பனைக்கு இருக்கும் மென்பொருட்களுக்கு முடியவில்லை.

Bugs இல்லாவுட்டால் தோசம்?

இவ் உலகத்தில் காணப்படும் எல்லா மாதிரியான மென்பொருட்களிலும் bugs என்ற இந்த தோசம் ஒன்றாவது இல்லாம் இல்லை.திறந்த மூல நிரல் அதற்கு விதி விளக்கு அல்ல! திறந்த மூல நிரலிலிலும் bugs என்ற தோசம் 1வது இருக்கத்தான் செய்கிறது. நாம் திறந்த மூல நிரலிலுள்ள நன்மை தீமையை ஆராய்வதற்கு முன் இன்றை காலக்கட்டத்தில் பாரிய அளவில் செலவில் வாங்கி பாவிக்கப்படும் மென்பொருட்கள் எதாவது தோசத்தை கண்டுக்கொண்டோம் என்றால் அதற்கான தீர்வாக,

 • நீங்கள் முதலாவதாக இதைப்பற்றி முறையீடு செய்வீர்கள் பின், அவர்கள் இதற்கான தீர்வை உடனடியாக பெற்றுத்தறுவார்கள் என எண்ணியிருத்தல்.

 • அவர்கள் இதற்கான தீர்வைப்பெற்றுதருவார்கள் என திருப்பவவும் எதோ ஒரு நம்பிக்கையில் இருப்பீர்கள்.

 • மூன்றாவதாக அவ் மென்பொருளின் மறுசீலமைப்பின் பதிப்பிற்க்கு அதிகமான செலவு எற்படாது என நம்பியிருத்தல்.

 • நாங்காவதாக அவ் பதிப்பில் தோசம் இல்லாம் புத்தம் புதிய விஷங்களும் வரும் என எதிர்பார்த்தல்.

 • இவ் நிறுவனம் நட்டம் அடையாது, முடப்படாது எனவும் எதிர்பார்த்தல்

  இவைகளை கவனிக்கையில் திறந்த மூலநிரல் மென்பொருட்களின் வசதி வாய்ப்பு குறைவு என குறைக்கூறுவது எந்த விதத்தில் நியாயம்??

  மென்பொருட்களின் பாதுகாப்பு தன்மை அல்லது வழிநடத்தல்.

சிறந்த மென்பொருட்கள் உற்பத்தி செய்த சில நிறுவனங்கள் மூடப்பட்ட தன் காரணம் அல்லது குறை நுகர்வோரின் கவனமின்மை அல்லது கைவிட்டமை. இல்லாவிட்டல் அந்த நிருவனத்தை விற்ற பின் அவ் நிருவனத்தை வாங்கியோர் அந்த மென்பொருளின் உற்பத்தியை இடை நிறுத்தி நுகர்வோரை கைவிட்டமை. இதற்கு சில உதாரணமாக

Neoworks நிருவனம் McAfee கொள்வனவு செய்து Neotrace என்ற மென்பொருளை இடைநிறுத்தியமை, Macromedia நிருவனத்தினால் Adobeயிடம் கொள்வனவுச்செய்த Fontographer மென்பொருளை கைவிட்டமை இவைகளை சுட்டிக்காட்டலாம்.

புரட்சிகாரர்கள்!

தன் மென்பொருளை Open source மாற்றி மக்களிடம் வழங்கியவர்களும் உண்டு. இதற்கு பல பல காரணங்களிலினால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த முடிவினால் மென்பொருட்களின் நிலை உயர்ந்ததுடன் புதிய பரினாமத்திற்கு மாற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 1. Netscape நிருவனத்தினால் Netscape Navigator opensource மாற்றி Firefox என

  மாற்றியமைத்தமை.

 2. Blender மென்பெருளை விற்பனை நோக்கில் உருவாக்கி அதை Open source மாற்றியமை.

 3. Sun Star officeயை open source மாற்றி openoffice.org வாக வெளியிட்டமை.

 4. Eudora open source மாற்றி Penelope வாக மாற்றியமை.

GNUவும் GNA

GNU,GNAகுழுவும் வேவ்வோறு குழுக்களாக காணப்பட்டாலும் இவை ஒன்றே என எண்ணலாம்.ஆனாலும் அது உண்மையல்ல.GNUகுழு தாம் உருவாக்கும் மென்பொருளின் மூலக்குறியீடை (source code) எல்லோருக்கும் பொதுவானதாக பகிர்தளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலே.இது fossஅதாவது free (Libre Open Source Software) என கூறுவர்.ஆனால் GNA குழு தாம் மென்பொருளின் மூலக்குறியீடை வழங்காமல், மென்பொருளை மட்டும் Compile பண்ணி இலவசமாக வழங்கினால் பொதுமானதே என்ற அடிப்படையிலாகும். இதற்கு Freeware எனவும் கூறலாம்.இது எதுவானல் இவையிரண்டுமே செய்வது மென்பொருட்களை எமக்கு இலவசமாக வழங்குவதல் நம்மைப்போல எழைக்கு பெறுமதியே ஆகும்.ஆனாலும் இது நம்மில் எத்தனை பெயருக்கு அறிகிறார்கள் மென்பொருட்களின் source code வழங்குவதால் எவ்வளவு நன்மை என்பது கேள்விக்குறியே?!
இதில் இன்னும் முடிக்க பெறாத திறந்த மூலநிரல் மென்பொருட்களும் காணப்படுகிறது. இதில் முதலாவதாக Open source software கூறலாம். இதை GNU சமூகம் 1984 தொடங்கியது ஆனால் இன்னும் இதை முடிவுக்கு கொண்டுவராத GNU Hurd ஆகும். GNU Hurd என்பது இயங்குதளம்(operating system) ஆகும். இதில் இன்னும் பணிகளை நிறைவு செய்யாததால் ஏனைய மென்பொருட்களின்(Gnu utilities) பணியை தொடர 1991ல் Linus Torvald உருவாக்கிய Linux kernel பாவிக்கின்றனர்.இதைப்பற்றி GNU இனையதளத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது. GNU Hurd முடிவுக்கு கொண்டு வந்தால் மற்றை இயங்குதளங்களை பின்தல்லிவிட்டு ஒரு சிறந்த இயங்குதளமாவதில் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.


எதிர்காலம்?

திறந்த மூல நிரல் மென்பொருட்களை உருவாக்குவதற்காக ஒரு பாரிய சமூகம் எதுவித எதிர்பார்ப்பும் இன்றி தானாகவே முன் வந்து சுயேச்சையான சேவையாற்றுகிறார்கள். இப்பணிக்காக பெரும்பாலானோர் ஒய்வுக்காலத்தையே செலவிட்டுகின்றன. இதில் சிலபேர் மட்டுமே தமது முழு நேரத்தையும் இதற்காக செலவிடுகின்றனர். இதனால் இதற்காக பண உதவி செய்து பரிபூரணமாக முழு நேர பணிக்காக செலவிட்டால் இவ் திறந்த நிரல் முலப்பொருள் ஏனைய மென்பொருட்களை விட சிறந்ததாகவும் இன்றைய கால கட்டத்தில் இல்லா மென்பொருட்களையும் உருவாக்க முடியும்.

திறந்தமுல நிரல் மென்பொருளாயின் ஏனைய விற்பனை சந்தையில் காணப்படும் மென்பொருளாயும் இதன் முக்கியத்துவமாக நாம் செய்யும் காரியம் ஒன்றே என்பதாகும்.இலவசமாகவும்,அதிக பொருட் செலவின்மையாலும் இதன் பாவனை மற்றும் காலத்தை சேகரிக்கவும் நாம் இதற்கு ஒத்துழைப்பை வழங்கினால் இதை ஒரு சிறந்த நிலைக்கு இட்டுச்செல்லாம் என்பதில் ஐயம் இல்லை. இனியும் கால நேரத்தை வீண் செய்யாது, திறந்த மூலநிரல் மென்பொருளின் பாவனையை தொடங்கவும். ஆரம்பத்தில் கடினமாக இருப்பதால் விட்டுவிடாமல் இருக்க பிடித்து மேலே செல்லுவோம். வாருங்கள் அனைவரும் அணிதிறள்வோம் இப்போது விட்டு விட்டு பிறகு விட்டத்தை பார்த்து பிரயோசனம் இல்லை.

இதை பற்றி மிக முக்கியமாக அறிந்துயிருக்க வேண்டியவர்கள், நிர்வாகி (administrator) மற்றும் server யை பற்றி அறிந்துக்கொள்ள முற்படுவோரும். Dell மூலம் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Dell PowerEdge R310,R410,R510,T410 rack server mother board களில் firemware னுள் malware இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை ஆரம்பத்திலே Dell நிருவனத்தினால் தரவுகளுக்கு கேடு விளைவிக்ககூடியது என அறியப்பட்டிருந்தது.நான் இதைப்பற்றி அறிவிப்பதன் நோக்கம்,அவர்களின் கடைமை உணர்ச்சியும் தமது வாடிக்கையாளிரின் மேல் காணப்படும் அக்கறையும்,சேவையின் முக்கியத்துவம் அறிந்தனாலேயே. இலங்கையின் Dell servers விற்பனையாளர்களும் இதே அக்கறையுடன் செயற்படுவார்களாயிருக்கும்..

பாதிப்பு எற்பட்ட சில மாதிரிகள்:

PowerEdge R310
PowerEdge R410
PowerEdge R510
PowerEdge T410

இந்த malware வால் MS Windows மற்றுமே பாதிப்பை எற்படுத்த முடியும் Windows அல்லாத வேறு இயங்குத்தளங்களுக்கு எதுவித பாதிப்பும் இல்லை. அதாவது Linux, Unix, BSD என்பவற்றுக்கு எந்த வித தீங்கு எற்படாது. Dell நிறுவனம் இந்த PowerEdge R410 rack server நுகர்வோரை தொலைப்பேசியினுடாக அணுகி இதைப்பற்றி அறியத்தரப்பட்டுள்ளது. (நம் நாட்டில் நிலமையைப்பற்றி தெரியவில்லை)ஆனாலும் இதைப்பற்றி மேலதிக தகவல்களை அளிக்க மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

மேலதிக தகவல்களை அறிய:

http://en.community.dell.com/support-forums/servers/f/956/t/19339458.aspx